இந்திய வீரரான இவரை சீண்டாமல் இருந்தாலே நாங்க ஜெயிச்சிடுவோம் – ஜோ ரூட் ஓபன்டாக்

Root

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை துவங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே விளையாட வைக்கப்படாமல் வெளியில் அமர வைக்கப் பட்டு வரும் தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது போட்டியில் விளையாடுகிறார் என்று தெரிகிறது. அதேபோன்று இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மிகவும் தடுமாறுவதால் பேட்ஸ்மேன்கள் வரிசையிலும் மாற்றம் வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் 4வது போட்டியின் பிளேயிங் லெவனில் விராட்கோலி என்ன மாற்றத்தை கொண்டு வருவார் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். அதற்கு முன்னர் தற்போது இந்த நான்காவது போட்டிக்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜோ ரூட் இந்திய அணியை எதிர்கொள்ள போகும் விதம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் எவ்வளவு சிறப்பான பந்து வீச்சாளர் என்பது எங்களுக்கு தெரியும்.

Ashwin

அவருக்கு எதிராக நாங்கள் விளையாட தயாராகி உள்ளோம். அதேபோன்று மூன்றாவது போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு எங்களது பந்து வீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். விராட்கோலி உலகின் தலைசிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை சீண்டாமல் இருப்பது நல்லது அவரை ஆக்ரோசப்படுத்தாமல், அமைதியாக விளையாட வைத்தாலே நாங்கள் வெற்றி பெறுவோம்.

- Advertisement -

kohli 1

அதுமட்டுமின்றி நான்காவது போட்டியை வெற்றிபெறும் பட்சத்தில் தொடரையும் எங்களால் வெல்ல முடியும். இந்திய அணியை வீழ்த்த விராத் கோலியை விரைவில் ஆட்டமிழக்க வைப்பது முக்கியம் அந்த வகையில் விராட் கோலியை சீக்கிரம் ஆட்டமிழக்க வைக்க எங்களால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவோம் என ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement