டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார். 1989ஆம் ஆண்டு 16 வயதில் அறிமுகமான அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் எதிர்கொண்டு இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டு 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக உலக சாதனை படைத்து ஓய்வு பெற்ற அவர் 15921 ரன்கள் அடித்துள்ளார்.
தற்போது அந்த சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் உடைப்பார் என்று ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பலரும் தெரிவித்து வருகிறார்கள். 2012இல் அறிமுகமான ரூட் 2020 வரை சாதாரண பேட்ஸ்மேனாகவே விளையாடி வந்தார். இருப்பினும் நாளடைவில் அனுபவத்தால் முன்னேறிய அவர் கடந்த 5 வருடங்களில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.
சச்சினை காப்பியடித்து:
அதனால் ஜேக் காலிஸ், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் ஆகியோரை அசால்டாக பின்னுக்குத் தள்ளிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனைப் படைத்துள்ளார். இதுவரை 35 வயதில் 13400+ ரன்களை அடித்துள்ள ரூட் இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடி 3000 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் சச்சினை முந்தி அவர் உலக சாதனை படைக்க பிரகாச வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சச்சினை பார்த்து வளர்ந்த தாம் அவருடைய சாதனையை உடைபதில் கவனம் செலுத்தவில்லை என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அதே சமயம் இங்கிலாந்துக்காக வெற்றிகளைக் குவிப்பதில் கவனம் செலுத்தும் போது அந்த சாதனை தாமாக உடையும் என்று தெரிவிக்கும் ரூட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சச்சின் மகத்தானவர்களில் ஒருவர். அழுத்தத்திற்கு கீழே விளையாடி அவர் சாதித்தது அற்புதமானது”
தாமாக உடையும்:
“சச்சினுக்கு எதிராக நீங்கள் விளையாடும் போது, அவரைக் காப்பி செய்து விளையாட முயற்சிப்பீர்கள். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் கௌரவமானது. என்னுடைய முதல் போட்டியில் புஜாரா இரட்டை சதத்தை அடித்து அவுட்டான போது மைதானத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஆரம்பத்தில் அது எனக்குப் புரியவில்லை”
இதையும் படிங்க: சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாக கில் – கம்பீரே காரணம்.. சாய் கம்பேக் கொடுப்பாரு.. பாண்டிங் விமர்சனம்
“பின்னர் சச்சின் வருவதால் அந்த ஆரவாரம் என்பது தெரிந்த தருணம் வேடிக்கையாக இருந்தது. அது சச்சின் எவ்வளவு விரும்பப்படுகிறார் என்பதைக் காட்டியது. உள்ளூரில் விளையாடிய போது பாண்டிங், சங்ககாரா, லாரா போல என்னை பாசாங்கு செய்வேன். தற்போது அவர்களுடைய பெயருடன் என்னுடையப் பெயரும் இருப்பது கூலானது. சச்சினின் சாதனையை உடைப்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. போட்டிகளை வெல்வதில் கவனம் செலுத்துகிறேன். அதைச் செய்தாலே மற்றவைகள் தாமாக நடக்கும்” என்று கூறினார்.



