சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த ரன்களை விட இவர் அதிக ரன்களை குவிப்பார் – முன்னாள் வீரர் கணிப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஜோ ரூட்டும் தலைமைதாங்கி விளையாடி வருகின்றனர். சமகாலத்தில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவன் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகின்றனர்.

இதில் ஒவ்வொருவரும் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவ்வப்போது முறியடித்து வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி தான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்து துவம்சம் செய்து இருக்கிறார். அதே போன்று தற்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தொட்டுவிட்டார்.

இந்த டெஸ்ட் போட்டி அவருக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமையும். சேப்பாக்கம் மைதானத்தில் 100வது டெஸ்ட் போட்டியை விளையாடப் போகிறார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் உட்பட 8,249 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல் சச்சின் டெண்டுல்கர் 8351 ரன்கள் குவித்திருக்கிறார்.

root 1

இருவரும் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கின்றனர். 100வது டெஸ்ட் போட்டியில் ஒரு இரட்டை சதமும் அல்லது மேற்பட்ட ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விடுவார் ஜோ ரூட். இதுகுறித்து முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜெப்ரி பாய்காட் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

- Advertisement -

எனக்கும் கெவின் பீட்டர்சன் போன்ற பலம் வாய்ந்த வீரர்களுக்கும் அதிகபட்சமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இவரால் 200 டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட முடியும். இது நடந்தால் சச்சின் டெண்டுல்கரை விட அதிக ரன்கள் குவிப்பது என்பதில் எந்த மாற்று கருத்தும். இல்லை ஏனெனில் தற்போது தான் இவருக்கு 30 வயதாகிறது.

root

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 99 போட்டிகளில் சமன் செய்துவிட்டார். இன்னும் ஒரு 100 டெஸ்ட் போட்டிகளில் ஆனால் சச்சின் டெண்டுல்கர் அடித்திருக்கும் 15921 ரன்கள் என்ற சாதனையை சுலபமாக கடந்து விடுவார் என்று கூறியிருக்கிறார் ஜெப்ரி பாய்காட்.