ஜோ ரூட் அடித்த இரட்டை சதம். விராட் கோலிக்கு முதன்முறையாக ஏற்பட்ட அவமானம் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

root 1

- Advertisement -

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 218 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இவர் இரட்டை சதமடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். அதிலும் குறிப்பாக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது சச்சின் அடித்து இருந்த ரன்களை விட 53 ரன்கள் அதிகமாக அடித்துள்ளார்.

சச்சின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தபோது 8405 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால் அதனை கடந்த ரூட் 8458 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 100வது டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் இன்ஜமாமின் சாதனையை அவர் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

root 2

100வது டெஸ்ட் போட்டியில் 218 ரன்களை குவித்து அதன் மூலம் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் 200-வது ரன்னை கடக்க அவர் சிக்ஸ் அடித்து பிரமாதப்படுத்தினார். இதன் மூலம் 200 ஆவது ரன்னை சிக்ஸர் மூலம் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

root 3

அதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற பின் இதுவரை யாரும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்ததில்லை. ஆனால் அந்த சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். இந்த ஒரே போட்டியில் அவர் அடித்த இந்த இரட்டை சதம் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement