
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்றார். அதே வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 27000க்கும் மேற்பட்ட ரன்கள் 83 சதங்கள் அடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் நிறை வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசியக் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக பயப்படாத விராட் கோலி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவராக அறியப்படுகிறார். குறிப்பாக 2014 ஆஸ்திரேலிய தொடரில் மிட்சேல் ஜான்சனுக்கு அவர் கொடுத்த பதிலடியை மறக்க முடியாது. இந்நிலையில் அதே தொடரில் விராட் கோலியை தாமும் கொஞ்சம் வம்பிழுத்து பார்த்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கு அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்த விராட் கோலி எஞ்சிய 4 நாட்கள் தம்மை பேச விடாத அளவுக்கு பதிலடி கொடுத்ததாக பர்ன்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் விராட் சதத்தை அடித்திருப்பார் என்று நான் 100% உறுதியாக சொல்வேன். அவரை சுற்றி சில கூச்சல்கள் சென்று கொண்டிருந்தது. ஸ்லெட்ஜிங் செய்யவில்லை”
“கீப்பராக ஹாடின், முதல் ஸ்லிப்பில் வாட்சன் இருந்தார்கள். நேதன் லயன் பவுலிங் செய்தார். பேட்டிங் களத்திற்கு அருகே நின்ற நான் 4 மணி நேரம் வரை விராட் கோலியிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் “விராட் நீங்கள் ஏதேனும் ஷாட்டுகளை அடிக்க வேண்டும்” என்று அவரிடம் சொன்னார். அப்போது லயன் பந்து வீசுவதை நிறுத்துமாறு சொன்ன விராட் என் பக்கம் திரும்பி “நீ பேசாதே புதுப்பையனே” என்று சொன்னார்”
“அடுத்தப் பந்திலேயே அவர் கவர்ஸ் பகுதியில் பவுண்டரி அடித்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் அடுத்த 4 நாட்கள் அவரிடம் நான் எந்த வார்த்தையும் சொல்லவில்லை. அது விராட் கோலி வம்பிழுக்கக்கூடியவர் கிடையாது என்பதைக் காண்பித்தது. அன்றைய நாளில் 24 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நான் விராட் கோலி போன்ற நபரிடம் எதுவும் சொல்லக்கூடிய நபர் கிடையாது”
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்து அறிவித்த – அஜின்க்யா ரஹானே
“விராட் பின்னங்கால் வைக்க மாட்டார். அவர் தன்னுடைய அணியின் அடையாளத்தை கண்டறிந்தார். தற்போது அவர் அணியில் இல்லாவிட்டாலும், கடந்த பல வருடங்களாக விராட் கோலி அமைத்த அடித்தளத்தைப் பின்பற்றி இன்னும் இந்தியா விளையாடுவதை உங்களால் பார்க்க முடியும். களத்தில் அவரை நான் பார்க்க முயற்சிக்க மாட்டேன். ஏனெனில் அது அவரை தூண்டிவிடும் என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் உலகத்தரம் வாய்ந்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பேட்ஸ்மேன்” எனக் கூறினார்.