- Advertisement -
ஆசிய கோப்பை

காலம் கடந்து சாதித்த சூர்யா பாய் எனக்கு இன்ஸ்பைரேஷன்.. அவர்கிட்ட அதை காப்பியடிக்கிறேன்.. ஜிதேஷ் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அந்தத் தொடரில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் சூரியகுமார் தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை ஆசியக் கோப்பையில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் ஓப்பனிங்கில் விளையாடிய சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு அவர் புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மா விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

சூரியகுமாரின் உத்வேகம்:

ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியாவுக்காகவும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 9 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் ஆர்சிபி முதல் முறையாக கோப்பையை வெல்ல உதவினார். இந்நிலையில் 31 வயதாகும் தமக்கு சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்புவதாக ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார்.

குறிப்பாக 31 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறினார். அதனால் கேப்டனாகவும் முன்னேறிய அவர் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தலைமைத் தாங்க தயாராகி வருகிறார். அப்படிப்பட்ட சூரியகுமாரை உத்வேகமாக எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கும் ஜித்தேஷ் அவருடைய பேட்டிங்கை காப்பியடிக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

காப்பி அடிக்கிறேன்:

இது பற்றி ஜிதேஷ் பேசியது பின்வருமாறு. “சூர்யா பாய் பலருக்கும் உத்வேகமாக இருக்கிறார். 31 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தாமதமாக மலரும் வீரர்களுக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ஃபீல்டிங்கை மாற்றியமைத்து எந்த பவுலிங் அட்டாக்கையும் அடித்து நொறுக்கக் கூடியவர்”

இதையும் படிங்க: நானும் தோனி மாதிரி வருவேன்.. தோனியை பார்த்து இதெல்லாம் கத்துகிட்டு 2025 உ.கோ வரேன்.. பாக் கேப்டன் பேட்டி

“அவர் திறமையின் கிடங்கு. அவரிடம் தொடர்ந்து நிறையக் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் நான் அவ்வப்போது அவரைப்போல விளையாட முயற்சிப்பேன். அவரை நான் நிறைய காப்பியடிப்பேன். தற்போது அவருடைய வித்தியாசமான ஷாட்டுகளை நான் என்னுடைய பேட்டிங்கில் செயல்படுத்தத் துவங்கியுள்ளேன். சூர்யாவின் ஒரு ஸ்பெஷல் ஷாட்டை நான் 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் அடித்தேன்” என்று கூறினார்.

- Advertisement -