- Advertisement -
ஐ.பி.எல்

இந்த வாய்ப்பை எனக்கு குடுத்தா சந்தோஷமா அதை ஏத்துக்க ரெடியா இருக்கேன் – ஜிதேஷ் ஷர்மா பேட்டி

ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இதுவரை தங்கள் விளையாடிய 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு மூன்று லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் அதில் ஒன்றோ அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிடும்.

ஆர்.சி.பி அணிக்காக எதையும் செய்ய தயார் : ஜிதேஷ் சர்மா

இதன் காரணமாக அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் காயம் காரணமாக எஞ்சியுள்ள தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது ஓய்வில் இருக்கும் அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். இருந்தாலும் அவரது காயம் தற்போதைக்கு குணமடையாது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எஞ்சியுள்ள தொடரில் அவரால் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்த அணியில் விராட் கோலி இருந்தாலும் அவர் கேப்டன் பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டதால் புதிய கேப்டனாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் கேப்டன் பதவி தனக்கு வந்தால் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வேன் என ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்.சி.பி அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்தால் அதைவிட பெருமை கிடையாது. அதனால் நிர்வாகம் அந்த பதவியை எனக்கு வழங்கினால் அதனை ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக செயல்படுவேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அது எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய விடயமாக இருக்கும்.

இதையும் படிங்க : இனி 7 கோடி ஒப்பந்தத்தில் இருக்க முடியாது.. அடுத்த சரிவை சந்திக்கப்போகும் ரோஹித் மற்றும் கோலி – விவரம் இதோ

அதோடு காயமடைந்த தேவ்தத் படிக்கல் மற்றும் பட்டிதார் ஆகியோருக்கு பதிலாக சரியான காம்பினேஷனை கொண்டு வந்து வெற்றிகரமாக அணியை வழி நடத்துவேன் என ஜிதேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -