- Advertisement -
ஐ.பி.எல்

விராட் கோலியை தாண்டி ராஜத் பட்டிதார் கேப்டன் பதவியை பெற என்ன காரணம்? – ஜிதேஷ் சர்மா கருத்து

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக அந்த அணியை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டூப்ளிசிஸ் தலைமையில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாகவே செயல்பட்டு இருந்தாலும் பிளேஆப் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதன் பின்னர் ஐபிஎல் தொடர் முடிந்த சில மாதங்களில் மெகா ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கழட்டி விடப்பட்டார்.

ராஜத் பட்டிதார் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இதுவே காரணம் : ஜிதேஷ் சர்மா

பின்னர் மெகா ஏலத்தின் போது ஆர்.சி.பி அணியானது பலவீரர்களை வாங்கி இருந்தாலும் அந்த அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்பட இருக்கிறார்கள்? என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் தற்போதைய ஆர்.சி.பி அணியில் விராட் கோலி தான் அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்பதனால் அவரைத் தாண்டி கேப்டன் பதவிக்கு யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வியும் இருந்தது. அதே வேளையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராக மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் கடந்த சில மாதங்களாக அவர்தான் மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க போகிறார் என்று பரவலாக பேசப்பட்ட வேளையில் விராட் கோலிக்கு கேப்டன் பதவி வழங்க நிர்வாகமும் முன் வந்தது. ஆனால் விராட் கோலி தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தொடர்ச்சியாக தான் பெங்களூரு அணிக்காக முழு பங்களிப்பை வழங்க மட்டுமே விரும்புவதாக அறிவித்து கேப்டன் பதவியினை நிராகரித்தார். அதனால் அந்த அணியின் நிர்வாகம் புதிய கேப்டனாக பட்டிதாரை அறிவித்திருந்தது.

மேலும் ஆர்.சி.பி அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் கேப்டன் பொறுப்பையும் சிறப்பாக செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது. இந்நிலையில் விராட் கோலியை தாண்டி ராஜத் பட்டிதார் கேப்டனாக நியமிக்கப்பட என்ன காரணம்? என்பது குறித்து தற்போது புதிதாக பெங்களூரு அணியில் இணைந்துள்ள ஜிதேஷ் சர்மா பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே ராஜத் பட்டிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டது மற்ற அனைவரையும் போன்று எனக்கும் தாமதமாகத் தான் சமூக வலைதளம் மூலம் தெரிந்தது.

- Advertisement -

விராட் கோலி ஏன் கேப்டன் பதவியை மறுத்தார்? என்று தெரியவில்லை. ஆனாலும் அது நிர்வாகம் மற்றும் கோலிக்கும் இடையேயான முடிவாகத்தான் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை விராத் கோலியை தாண்டி பட்டிதார் கேப்டன் பதவிபெற காரணம் யாதெனில் : கோலி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே கேப்டன் பதவியை துறந்து முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். எனவே இந்த ஆண்டும் அவர் என்ஜாய் செய்து விளையாட நினைத்திருக்கலாம். அதன் காரணமாக அவர் கேப்டன் பதவியை மறுத்திருக்கலாம்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கப்போகும் முக்கிய நபர் – எல்லாம் அவர் கையில தான் இருக்கு

அதேபோன்று ராஜத் படித்தாரிடம் இருக்கும் திறனை நிர்வாகம் புரிந்து கொண்டதாலும், அவர்மீது நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்ததாலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கிருக்கலாம். மேலும் விராட் கோலியின் ஆதரவும், நம்பிக்கையும் பெற்றிருப்பதாலும் பட்டிதாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என ஜிதேஷ் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -