- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 வேர்ல்டுகப்ல என்னை நீக்கியதும்.. எனக்கு பர்ஸ்ட் மெசேஜ் அனுப்புனது பாண்டியா தான் – ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 2026 ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாட தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக பல்வேறு நட்சத்திர வீரர்களும் கடந்த சில மாதங்களாக தாங்கள் சந்தித்த அனுபவம் குறித்தும் பல்வேறு வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஹார்டிக் பாண்டியா என்னை தேற்றினார் : ஜிதேஷ் சர்மா

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய டி20 அணியில் தொடர்ந்து விளையாடி வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக தான் நீக்கப்பட்டது குறித்தும் அதன்பின்னர் அவருக்கு ஹார்டிக் பாண்டியா ஆதரவளித்தது குறித்தும் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரின் போது டாப் ஆர்டரில் விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டும் என்பதனால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்க கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா கழட்டி விடப்பட்டார். இப்படி அவர் கழட்டி விடப்பட்டது நிச்சயம் அவருக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும். இந்நிலையில் தனது வருத்தம் குறித்து பேசிய ஜிதேஷ் சர்மா கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடரின் இறுதி நேரத்தில் நான் நீக்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இருந்தாலும் அணியின் சமநிலைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதை நான் ஏற்றுக் கொண்டேன். என்னை அணியிலிருந்து நீக்கியதும் பல வீரர்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தனர். ஆனால் ஹார்டிக் பாண்டியா தான் முதலில் எனக்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பினார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். நான் அவருடன் பலமுறை உரையாடி இருக்கிறேன். அதுமட்டும் இன்றி பரோடா அணிக்காகவும் நான் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன் என்பதனால் அவருடைய குணம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த ஆண்டு சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்கள் யார்? புதிய ஜோடியை அறிவித்த – ருதுராஜ் கெய்க்வாட்

டி20 உலக கோப்பை தொடரில் எனது பெயர் இல்லாத போது முதன்முதலாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பாண்டியா : ஒரு மனிதனாகவும், கிரிக்கெட் வீரனாகவும் நீ வளர வேண்டும். அதனால் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இரு என்று அவர்தான் என்னை தேற்றி ஆசுவாசப்படுத்தினார் என ஜிதேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -