இப்படி அசாதித்திய திறமை உள்ள ஒருவரை பெஞ்ச்சில் உட்கார வைக்கவா எடுத்தீர்கள் ? இப்படியே போனால் நல்லா இருக்காது – விவரம் இதோ

Pant-1
- Advertisement -

ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணியில் ரிஷப் பண்ட்-இன் இடம் கேள்விக்குறி ஆகிக் கொண்டே வருகிறது. அணியில் அறிமுகமான நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி கொண்டிருந்தார் பன்ட். ஆனால் அவருக்கு ஏற்ற பார்மட் டி20 கிரிக்கெட் தான் .அதில் எப்படியாவது சாதித்து விடுவார் என்று இந்திய அணி தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தது இந்திய அணி.

Pant 1

- Advertisement -

ஆனால் கிடைத்த போட்டிகளில் இவர் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை இதன் காரணமாக மாற்று வீரர்களை தேடியது இந்திய அணி. அந்த நேரத்தில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் ஓரளவிற்கு செய்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். இதனால் அவரையே நிரந்தர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மாற்றிக்கொண்டது இந்திய அணி நிர்வாகம்.

இதனால் ரிஷப் பண்ட் எதற்கு அணியில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான பல முன்னாள் வீரர்கள் இந்திய அணி நிர்வாகத்தைச் சாடி வருகின்றனர்.

தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாரத் ஜிண்டால் அணி நிர்வாகம் மீது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது :

ரிஷப் பண்ட் ஏன் இந்திய சீனியர் அணியில் எடுத்தீர்கள்? அவர் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இந்திய சீனியர் அணியில் சேர்க்க விட்டால் கூட பரவாயில்லை. இந்திய ஏ அணியில் அல்லது உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பார். திறமையான வீரர்களின் திறமையை வீணாக்காதீர்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. என இந்திய அணியில் சாடியுள்ளார். இதுபோக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் ஜிண்டால்.

Advertisement