எல்லா திறமையும் இருந்தும் 10 வருஷமா அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் – இந்திய வீரர் வருத்தம்

Raina
- Advertisement -

2010ஆம் ஆண்டு தனது 19 வயதில் இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியவர் ஜெயதேவ் உனத்கட். சவுராஸ்டிரா அணியை சேர்ந்தவர். அதன்பின் கடந்த 10 வருடங்களில் 7 ஒருநாள் 10 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக இவர் ஆடியது குறிப்பிடத்தக்கது.

Unadkat 1

- Advertisement -

இந்நிலையில் தான் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க போவதாக தெரிவித்துள்ளார் உனத்கட். இதுகுறித்து அவர் கூறுகையில் : சிவப்புப் பந்தில் விளையாடுவது. எனக்கு மிகவும் பிடிக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த கடினமான நேரத்தை நான் நினைக்காத நாளில்லை.

நான் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலமாக உள்ளது. போட்டியும் கடுமையாக உள்ளது.அதனை தாண்டி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக ஆடவேண்டும் என்பதே விருப்பம். அணியில் இடம்பிடித்து எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

unadkat

அத்ற்க்காகத்தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படியாவது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.சமீபகாலமாக சௌராஷ்டிரா ரஞ்சி அணி உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறது அந்த அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை போட்டியில் மொத்தம் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இவர்.

- Advertisement -

தற்போது 28 வயதான உனத்கட் தலைமை வகித்த சௌராஷ்டிரா அணியை ரஞ்சி கோப்பை வெல்ல வைத்த பெருமையும் உள்ளது. இவரின் இந்த செயல்பாட்டை ஆதரித்து முன்னாள் வீரர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் போட்டிகளிலும் உனட்கட் சிறப்பாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில வீரர்களுக்கு திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இன்மை காரணமாக அணியில் விளையாட முடியாத நிலை ஏற்படும். அதுபோன்று சிறப்பான திறமை இவரிடம் இருந்தும் இவர் தொடர்ந்து இந்திய அணியில் ஓரம்கட்டப்பட்டு வருகிறது.

Advertisement