எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் இந்த நிலை வரக்கூடாது. எப்படி அவுட் ஆகி இருக்கார் பாருங்க – வீடியோ இதோ

Unadkat

இந்தியாவில் தற்போது தியோதர் டிராபி தொடர் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கும் இடையே ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இந்த போட்டியில் இந்திய ஏ அணியின் வேகப்பந்து வீச்சாளர் உனட் கட் பேட்டிங் செய்யும்போது ரன்அவுட் ஆன விதம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதன்படி இந்திய ஏ அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 43-வது ஓவரில் பேட்டிங் செய்த உனட் கட் நதீம் வீசிய அந்த பந்தை கிரீசில் இருந்து வெளியேறி வந்து ஸ்டோக் வைத்தார். அந்த ஸ்டோக் வைக்கும் போது தடுமாறிய அவர் பின்னர் அங்கே இருந்து எழுந்து கிரீஸுக்குள் வரும் முன் ஜாதவ் அந்த பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் பட்டேல் த்ரோ செய்தார்.

உடனே பட்டேல் அந்த பந்தை பிடித்து ஸ்டம்பில் அடிக்க உனட் கட் ரன்அவுட் ஆனார். இதனை சற்றும் எதிர்பாராத உனட் கட் தான் இல்லையா என்ற குழப்பத்தில் வெளியேறினார். ஆனால் அவர் அவுட்டாகி தான் வெளியே சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.