இவர்களுடன் ஆடினால் “நேரம் தான் வீண்” என்று சொன்ன இங்கிலாந்து அணியினர்.! பிரபல வீரர் பதிவு

sri

இலங்கையை சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியா இங்கிலாந்து அணியுடன் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வினை பகிர்ந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு இலங்கை 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த கால கட்டத்தில் இலங்கை அணி பலமான அணியாகவே வளம் வந்தது. ஜெயசூரியா,ஜெயவர்த்தனே,சங்கக்காரா மற்றும் டி சில்வா மற்றும் முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் அணியில் ஆதிக்கம் செலுத்திய காலம்.

jaya

இருப்பினும், இங்கிலாந்து அணி இலங்கை அணியை டெஸ்ட் போட்டிகளில் விளையாட அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால், இலங்கை அணிவீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தகுதி இல்லாதவர்கள் மேலும் அவர்களால் இஷ்டத்துக்கு மட்டையை சுழற்ற மட்டும் தான் தெரியும். முறையான கிரிக்கெட் ஷாட்கள் ஆட தெரியாது என்று மறுப்பு தெரிவித்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணி, இலங்கை அணியை ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கு அழைத்தது. அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கில்லாது 445 ரன்கள் அடித்தது. இலங்கை அணி ஜெயசூரியா (213) ரன்கள் மற்றும் டி சில்வாவின் (152)ரன்கள் மூலம் 591 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 181 ரங்களுக்கு சுருண்டது. முரளிதரன் 65 ரன்களை கொடுத்து 9 விக்கெட் வீழ்த்தினார். வெற்றிக்கு 35 ரன்கள் தேவை அதனை 5 ஓவர்களில் இலங்கை அணி அடித்து வெற்றி பெற்றது.

jayasuriya

எங்களுடன் ஆடினால் நேர விரயம் என நினைத்த இங்கிலாந்து அணியை அந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வென்றது எப்போதும் மறக்கமுடியாத நிகழ்வாக என்னிடம் உள்ளது. என்று ஜெயசூரியா தெரிவித்தார்.