அந்த 2 விஷயங்களை முன்னேற்றுவதே என்னோட முதல் இலக்கு.. புதிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா பேட்டி

Jay Shah 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த இந்திய அரசின் அமைச்சரின் மகனான அவர் 2015 முதலே பிசிசிஐ அமைப்பில் வேலை செய்து வந்தார். அதன் பின் 2019ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

குறிப்பாக நியூசிலாந்து நாட்டின் கிரேக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை. எனவே அடுத்த தலைவராக மற்ற நாட்டு வாரியங்களின் ஆதரவுடன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சொல்லப்போனால் 35 வயதிலேயே இந்த பதவியைப் பெற்றுள்ள அவர் உலகிலேயே மிகவும் இளம் வயதில் ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

முன்னேற்றுவாரா ஜெய் ஷா:

இந்நிலையில் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை வெற்றிகரமாக கொண்டு சேர்ப்பதே தம்முடைய முதல் வேலை என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தும் நவீன் யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஐசிசியின் இந்த மதிப்பு மிக்க பொறுப்பை ஏற்க என் மீது நம்பிக்கை வைத்த உறுப்பினர் வாரியங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதிலும் விளையாட்டின் தரத்தை உயர்த்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த முக்கிய பாத்திரத்தில் நான் அடி எடுத்து வைக்கும் போது உங்களின் அதிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் அழகான கிரிக்கெட்டுக்கும் என்னை அர்ப்பணிப்பதற்கும் உறுதியாக இருக்கிறேன்”

- Advertisement -

ஒலிம்பிக்ஸ், டெஸ்ட்:

“2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நாம் ஒரு உருமாறும் சகாப்தத்தின் உச்சத்தில் நிற்கிறோம். இந்த தருணம் ஒரு மைல்கல் மட்டுமல்ல இந்த அற்புதமான விளையாட்டில் நாம் அனைவருக்குமான தெளிவான அழைப்பு. இது போன்ற அற்புதமான காலகட்டத்தில் ஐசிசியை வழி நடத்துவது எனது பாக்கியம். எனது பதவி காலத்தில் திறமையானவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான தனித்திட்டத்தை அமைப்பதற்கு உழைக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: அது மட்டும் நடக்காம போய்ருந்தா 200 ஒன்டே, 80 டெஸ்டில் விளையாடிருப்பாரு.. தவான் கோச் ஆதங்கம்

“இந்தத் திட்டத்தில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். டி20 இயற்கையாகவே பரபரப்பான வடிவமாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமாகும். கிரிக்கெட்டர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை செய்வதே நம்முடைய இலக்கு” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக ஜெய் ஷா வேலையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement