துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூருவில் துவங்க உள்ளது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரது தலைமையில் விளையாடப் போகும் 4 அணிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அந்த 4 அணிகளில் ஜெய்ஸ்வால், ரியான் பராக் போன்ற நிறைய இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
சொல்லப்போனால் அத்தொடரில் கம்பீர் பரிந்துரைப்படி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் விளையாடுவதாக இருந்தது. இருப்பினும் பெரிய அனுபவம் கொண்ட அவர்களுக்கு கடைசி நேரத்தில் பிசிசிஐ தாமாக வந்து ஓய்வு கொடுத்தது. இருப்பினும் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், அக்சர் படேல் மற்ற சீனியர் வீரர்கள் அத்தொடரில் விளையாட தேர்வாகியுள்ளனர்.
ரொம்ப ஸ்ட்ரிக்ட்:
இந்நிலையில் விராட், ரோஹித்தை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருந்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கண்டிப்பான நிலையை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அப்படி செய்யவில்லை என்றால் இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் துலீப் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவை 2023 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்க 2022/23 ரஞ்சிக் கோப்பையில் வலுக்கட்டாயமாக விளையாட வைத்ததாகவும் ஜெய் ஷா கூறியுள்ளார். அதனால் காயத்திலிருந்து குணமடையும் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்காக தேர்வாக முடியும் என்ற நிலைமையை கொண்டு வந்துள்ளதாகவும் ஜெய் ஷா கூறியுள்ளார். அதனால் இந்திய வீரர்கள் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மதிப்பளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நாங்கள் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறோம். காயமடைந்த வந்த போது ரவீந்திர ஜடேஜாவிடம் உள்ளூர் கிரிக்கெட்டில் சென்று விளையாடுமாறு நான் தான் சொன்னேன். எனவே காயத்திலிருந்து வரும் யாராக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடி தங்களுடைய ஃபிட்னஸை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணிக்காக தேர்வாக முடியும். அதற்காக விராட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுமாறு கேட்க முடியாது”
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவுக்கு ரஹானே மற்றும் புஜாராவின் கரியர்.. காரணமே இதுதான் – பி.சி.சி.ஐ செய்த வேலை
“அவர்கள் காயமடையாமல் இருப்பது முக்கியம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல நாங்களும் எங்களுடைய டாப் வீரர்களை வேலையாட்களாக நடத்தாமல் மரியாதை கொடுக்க வேண்டும். துலீப் கோப்பை அணிகளை பார்க்கும் போது விராட், ரோஹித்தை தவிர்த்து மற்ற அனைவரும் விளையாட உள்ளனர். குறிப்பாக நான் எடுத்த கடினமான முடிவுகளாலேயே ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர்” என்று கூறினார்.



