இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசி-ஐயின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது மிகப்பெரிய இடத்தில் இருக்க மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கி உள்ளார். இந்திய அணி பங்கேற்கும் அனைத்து தொடர்களையும் சரியான முறையில் திட்டமிடும் அவர் வீரர்களுக்கும் அவ்வப்போது பரிசுத்தொகை வழங்கி ஊக்குவித்து வருகிறார்.
அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு இந்திய அணிக்கு மெகா பரிசுத்தொகையும் அறிவித்து அசர வைத்திருந்தார். தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துடன் பணியாற்றி வரும் ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் தலைவராகவும் வாய்ப்பு அவரது கைகளுக்கு கிடைத்துள்ளது.
தற்போது ஐசிஐசியின் தலைவராக இருக்கும் கிரெகே பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்தெடுப்பதற்காக ஐசிசி தற்போது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
ஒரு முறை ஐசிசி தலைவராக பதவி ஏற்கும் ஒருவர் இரண்டு ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்க முடியும். அதேபோன்று ஒருவர் ஐசிசி-யின் தலைவர் பொறுப்பை ஏற்றால் தொடர்ச்சியாக மூன்று முறை அவர் தலைவராக செயல்பட முடியும்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஐசிசி பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் அந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தால் நிச்சயம் மற்ற நாட்டு நிர்வாக உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : லக்ஷ்மன், டிராவிட் மாதிரியான.. அவரை கழற்றி விட்டு இந்தியா தப்பு பண்ணப் போறாங்க.. ஹைடன் எச்சரிக்கை
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார வாரியமாக பார்க்கப்படும் பிசிசிஐ-யின் கீழ் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ஐசிசி பதவியும் அவரை தேடிச்செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர்இந்தியாவை சேர்ந்த சரத் பவார், ஜெகன்மோகன் டால்மியா, ஸ்ரீனிவாசன், ஷசாங்க் மனோகர் ஆகியோர் இந்த பதிவில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



