2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணிக்கு அந்த பிரச்சனையை வர விடமாட்டேன்.. ஜெய் ஷா வாக்குறுதி

Jay Shah 3
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்பிக்கும் நோக்கத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு உலக ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் அணிக்கு சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படாது. மாறாக 2 வருடம் லீக் சுற்றில் விளையாடி புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடித்து ஃபைனலில் வென்றால் தான் கோப்பை வழங்கப்படும் என்ற நிலை உருவானது.

அப்படி ஐசிசி உருவாக்கிய தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் தங்களுடைய சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இங்கிலாந்து கூட இதுவரை தகுதி பெற்றதில்லை. அதே போல ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக தகுதி பெற்றதில்லை.

- Advertisement -

ஜெய் ஷா உறுதி:
இருப்பினும் இந்திய அணி மட்டுமே 2021, 2023 ஆகிய வருடங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த ஃபைனல்களுக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக சாதனை படைத்தது. ஆனால் அந்த ஃபைனல்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் இந்தியா தோற்றது தான் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகமாக அமைந்தது. முன்னதாக அந்த தோல்விகளுக்கு ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரின் ஃபைனல் மே 28ஆம் தேதி முடிந்தது. ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் துவங்கியது. அதனால் இந்திய வீரர்கள் முழுமையாக தயாராகாமல் பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதே போன்ற நிலையால் தான் 2021 ஃபைனலிலும் இந்தியா தோற்றது.

- Advertisement -

அதனால் ஐபிஎல் தொடரை தடை செய்ய வேண்டும் என்று அந்த சமயங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்ததை மறக்க முடியாது. இந்நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் ஐபிஎல் ஃபைனலுக்கும் இடையே குறைந்தது 15 நாட்கள் இடைவெளி இருக்கும் அளவுக்கு அட்டவணை தயாரிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். எனவே இம்முறை அந்தப் பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கேப்டனாக தோனி எங்களுக்கு இதை கொடுத்ததால் தான் நாங்க வளர்ந்தோம்.. ரோஹித் சர்மா பேட்டி

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முந்தைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு நமது அணி தாமதமாக செல்லவில்லை. இருப்பினும் நமக்கு வேறு ஆப்ஷன் இல்லை. ஆனால் இப்போதிலிருந்து ஐபிஎல் தொடரின் முடிவுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் இடையே நமக்கு 15 நாட்கள் இடைவெளி இருக்கும். இந்த நேரத்தில் கடந்த 2 ஃபைனல்களில் விளையாட நாம் தகுதி பெற்றதை பாராட்ட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement