ஐ.பி.எல் தொடரை போன்றே மாற்றொரு தொடர் துவங்குகிறது. எப்போ தெரியுமா? – ஜெய் ஷா அறிவிப்பு

Jay-shah
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சார்பில் பிரான்சைஸிஸ் தொடரான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 14 ஐபிஎல் சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக பதினைந்தாவது ஐபிஎல் சீசனும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுவதன் மூலம் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

IPL

- Advertisement -

அதோடு அவர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு உள்ளதால் ஐபிஎல் களம் என்பது இளம் வீரர்களின் கனவாகவே இருந்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் உலகெங்கிலும் உள்ள வீரர்களும் பங்கேற்று தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் ரசிகர்களின் மத்தியில் ஐபிஎல் மிகவும் பிரபலம் அடைந்த ஒன்றாக உள்ளது.

இந்தியா மட்டுமின்றி இந்தியாவைக் கடந்து கிரிக்கெட்டை ரசிக்கும் அனைத்து நாடுகளிலும் ஐபிஎல் தொடர் அவ்வளவு பிரபலமான ஒன்று. இந்நிலையில் ஆண்களுக்ககான ஐபிஎல் தொடரை போன்றே விரைவில் மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் துவங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளரான ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Womens

அதனைத் தொடர்ந்து இப்போது மகளிருக்கான ஐபிஎல் தொடரை ஆரம்பிப்பதற்கான பணிகளையும் தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் நான் உறுதியாக தெரிவித்துக் கொள்வது ஒன்று மட்டும்தான் விரைவில் மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் அறிமுகமாகும். மேலும் அப்படி மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் அறிமுகமாகும் பட்சத்தில் ரசிகர்கள் மத்தியிலும் அது அதிக வரவேற்பினை பெற நாங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்தியாவில் மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோன்று உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 தற்போது மகளிருக்கான தொடரும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : ஆஸி அணி சீனியர் கிரிக்கெட்டில் செய்ததை அண்டர் 19-ல் செய்து காட்டிய இந்திய வீரர்கள் – அப்படி என்ன தெரியுமா?

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் அதேபோன்று இங்கிலாந்தில் தி 100 என மகளிருக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்டுவரும் கிரிக்கெட் தொடர்களை போன்று இந்தியாவிலும் ஐபிஎல் நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இப்படி மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் பட்சத்தில் பல வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement