ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு – விவரம் இதோ

IPL 2022 (2)
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் ஐபிஎல் தொடரானது முழுவதுமாக நடைபெறாமல் இருந்ததன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் இந்தியாவில் இத்தொடர் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் பி.சி.சி.ஐ யிடம் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் பி.சி.சி.ஐ-யும் தங்களது சிறப்பான நடவடிக்கை மூலமாகவும், சரியான திட்டமிடல் மூலமாகவும் 15-வது ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி வருகிறது.

Shami GT IPL 2022

- Advertisement -

கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இத்தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கப்போகும் அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த பிறகு பிளே ஆப் சுற்று போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில் இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

MI vs DC IPL 2022

அதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதி சுற்று போட்டியில் மே 24-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போதும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் உள்ள அணிகளில் எலிமினேட்டர் போட்டியில் மே 25-ஆம் தேதி இதே கொல்கத்தா மைதானத்தில் மோதும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளிவிட்டு மே 27-ஆம் தேதி முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மோதும் என்று தெரிவித்துள்ளார். அந்த போட்டி அகமதாபாத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பினிஷெர்னா கடைசியில் தான் களமிறங்கணும்னு ரூல்சா? ராஜஸ்தானை விளாசிய கவாஸ்கர் – என்ன நடந்தது?

அதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியானது மே 29-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்த இறுதிப் போட்டியில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement