ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் துவங்க உள்ள இந்த தொடரில் அனைத்து அணிகளும் டி20 கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் தற்போது இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதில் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அணியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஜெய்ஷா கூறுகையில் : பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று அணிக்கு ஆலோசகராக தோனி செயல்பட இருப்பது மகிழ்ச்சி.
அவர் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடன் அணிக்கு நெருக்கமான வேலைகளை கவனிப்பார். மேலும் அணியின் சப்போர்ட் ஸ்டாப் நிர்வாகிகள் அனைவருடனும் சேர்ந்து அவர் பணியாற்ற இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஆலோசகராக தோனியின் பணி யாதெனில் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பையை கைப்பற்றி தந்தது மட்டுமின்றி அதிக அனுபவம் வாய்ந்த தோனி போட்டிக்கான திட்டங்கள், வீரர்களின் செயல்பாடு என அனைத்தையும் கவனித்து போட்டிக்கு ஏற்றார் போன்ற ஆலோசனைகளையும், திட்டங்களையும் கொடுக்கும் ஆலோசகராக செயல்பட உள்ளார்.

இது இந்திய அணிக்கு தற்போது மிக பலமான விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக திறந்த டோனி எப்போதும் சிறப்பான முடிவுகளை எடுக்கும் திறமை வாய்ந்தவர். எனவே அவரின் வழிகாட்டுதல் இந்திய அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



