IND vs ENG : இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை – முழுவிவரம்

Bumrah
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 9-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் போராடி 170/8 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு முதல் முறையாக ஓபனிங் ஜோடியாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டிய நிலையில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் ரோகித் சர்மா 31 (20) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்ற அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி 1 சிக்சருடன் ரிஷப் பண்ட்டும் 26 (15) ரன்களில் அவுட்டானார்.

அதனால் 61/3 என தடுமாற்ற தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 15 (11) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 12 (15) ரன்களிலும் 10-வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய பொறுமையாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக்கும் 12 (17) ரன்களில் அவுட்டானதால் 89/5 என சரிந்த இந்தியா 150 ரன்களை தாண்டாது என ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

இந்தியா மிரட்டல்:
அப்போது ஹர்ஷல் படேல் முக்கியமான 13 (6) ரன்கள் எடுக்க மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் போராடிய ரவிந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் 46* (29) ரன்கள் எடுத்து காப்பாற்றினார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு மிரட்டலாக பந்துவீசிய இந்தியா ஆரம்பத்திலேயே மடக்கி பிடித்தது. ஏனெனில் இன்னிங்ஸ்சின் முதல் பந்திலேயே ஜேசன் ராயை கோல்டன் டக் அவுட்டாகிய புவனேஸ்வர் குமார் 3-வது ஓவரில் கேப்டன் பட்லரை 4 (5) ரன்களில் காலி செய்தார்.

அதனால் 11/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு லியம் லிவிங்ஸ்டன் 15 (9) ஹரி ப்ரூக் 8 (9) சாம் கரன் 2 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் மேலும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 10.2 ஓவரில் 60/6 என மொத்தமாகத் சரிந்த இங்கிலாந்தை காப்பாற்ற முயன்ற மொயீன் அலி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (21) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க கடைசியில் டேவிட் வில்லி 33* (22) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் எதிர்ப்புறம் அந்த வீரர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

அதனால் அந்த அணியை 17 ஓவரில் 121 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதனால் முதல் போட்டியில் ஏற்கனவே வென்றிருந்த இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சமீபத்திய டெஸ்ட் போட்டியில் மெகா தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதுமே தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது.

மிரட்டிய பும்ரா:
இப்போட்டியில் அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தாலும் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை சாயத்தை புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் 3 ஓவரில் 10 ரன்களை மட்டும் கொடுத்து இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் லியம் லிவிங்ஸ்டனை கிளீன் போல்டாக்கி மிரட்டலாக பந்து வீசினார்.

- Advertisement -

குறிப்பாக புவனேஸ்வர் குமார் போன்ற இதர பவுலர்களை காட்டிலும் 3.33 என்ற மிகவும் குறைவான துல்லியமான எக்கனாமியில் பந்து வீசிய அவர் இப்போட்டியில் பந்துவீச்சு துறையில் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செய்யப்பட்டார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் இவர் இதே பர்மிங்காம் மைதானத்தில் நடந்த சமீபத்திய டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கில் ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்டு முடிந்த அளவுக்கு கேப்டனாக வெற்றிக்காக போராடினார்.

இருப்பினும் இதர வீரர்கள் கைவிட்டதால் தோல்வியை பதிவு செய்த அவர் முதல் டி20 போட்டியில் பங்கேற்காத நிலையில் இந்த 2-வது போட்டியில் களமிறங்கியதுமே தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். இப்போட்டியில் 3 ஓவரை வீசிய அவர் அதில் ஒரு ஓவர் மெய்டனாக வீசினார். மேலும் மொத்தமாக இதுவரை 58 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 9 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

இதையும் படிங்க : பவர்பிளேவை தாண்டிட்டா இவரை விட ஒரு டேஞ்சர் பேட்ஸ்மேன் யாரும் கிடையாது – ஆட்டநாயகன் புவி ஓபன்டாக்

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) : 9*
2. குலாம் அஹ்மடி (ஜெர்மனி) : 7

Advertisement