- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4-ஆவது போட்டியிலும் பும்ரா விளையாட வாய்ப்பில்லை.. எப்போது அணிக்கு திரும்புவார்? – வெளியான தகவல்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தரம்சாலா நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடவில்லை. பும்ரா தனிப்பட்ட காரணங்களால் தனது வீட்டிற்கு சென்றுள்ளதால் தான் இந்த போட்டியை தவறவிட்டுள்ளார் என்று டாசின் போதே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவான தகவலை வழங்கி அந்த காரணத்தையும் கூறியிருந்தார்.

4 ஆவது போட்டியிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் :

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இருந்து அவர் திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பில் ஹர்ஷித் ராணா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணிக்கு பும்ரா திரும்புவாரா? மாட்டாரா? என்பது குறித்த தெளிவான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியாகியுள்ள தகவலின் படி : ஜஸ்ப்ரீத் புமரா தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் மோசமான உடல்நிலை காரணமாக அனுமதிக்கப்பட்டதாலே வீடு திரும்பியிருந்தார்.

- Advertisement -

அப்படி வீடு திரும்பியிருந்த அவர் இன்னும் இந்திய அணியுடன் இணையவில்லை. அதனால் இந்த நான்காவது போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாட மாட்டார். அதேவேளையில் பும்ராவின் குடும்ப உறுப்பினரின் உடல்நிலை சீராகும் பட்சத்தில் அவர் ஐந்தாவது போட்டிக்கு முன்னர் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேங்க் யூ சோ மச்.. தன்னை ஏலத்தில் வாங்கிய சி.எஸ்.கே அணிக்கு நன்றி தெரிவித்து – சர்பராஸ் கான் நெகிழ்ச்சி பதிவு

ஒருவேளை ஐந்தாவது போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை என்றால் நேரடியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தான் இந்திய அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து ஹர்ஷித் ராணாவுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -