கோவாவில் சிம்பிளாக நடைபெற்று முடிந்த பும்ராவின் திருமணம். பொண்ணு யார் தெரியுமா ? – விவரம் இதோ

Sanjana
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் தற்போது மூன்று விதமான பார்மட்டிலும் இந்திய அணியில் தவிர்க்கமுடியாத முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆகவும், உலக அளவில் நம்பர் 1 பவுலராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் டி20 கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனிப்பட்ட முறையில் எனக்கு ஓய்வு வேண்டும் என்று பிசிசிஐ இடம் கேட்டு இருந்தார். அதன் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டி மற்றும் டி20 ஒருநாள் தொடர் என ஒரு பெரிய விடுப்பு எடுத்துக் கொண்ட அவரை சுற்றி சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவச் தொடங்கின.

அதில் அவர் திருமணம் குறித்த வதந்தியும் அடங்கும். ஆனால் அவர் திருமணம் செய்யப்போகிறார் என்பதை பி.சி.சி.ஐ யும் உறுதி செய்தது. இருப்பினும் அவர் திருமணம் குறித்த எந்தவித தகவல்களும், மணப்பெண்ணின் பெயரோ பிசிசிஐ வெளியிடவில்லை. மேலும் நெருங்கிய உறவினர்களுடன் தனது திருமணத்தை நடத்த விரும்பியதால் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

sanjana 1

இந்நிலையில் தற்போது நேற்று கோவாவில் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தினர் என 20 பேர் மட்டும் கலந்து கொள்ள எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக ஜஸ்பிரித் பும்ராவின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவரது மனைவி யாரெனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசன் என்பவர் தான். இவர்கள் இருவரும் திருமணம் முடித்து உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sanjan 2

ஏற்கனவே சஞ்சனா கணேசன் மற்றும் பும்ரா ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று உறுதியற்ற தகவல்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது இவர்கள் திருமணத்தை முடித்து உள்ளதால் அந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. எது எப்படி இருப்பினும் இந்த திருமணத்தை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement