இந்த வெற்றிக்கு காரணமே ரசிகர்கள் தான்.. பாகிஸ்தானை வீழ்த்த இந்த திட்டத்தை யூஸ் பண்ணேன்.. பும்ரா பேட்டி

Jasprit Bumrah 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. ஜூன் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 120 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்ததால் தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42, அக்சர் பட்டேல் 20 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நசீம் ஷா, ஹரிஷ் ரவூப் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் மிகவும் துல்லியமாக பந்து வீசி அதிரடியாக விளையாட முடியாமல் அழுத்தத்தை உண்டாக்கினர்.

- Advertisement -

ஆட்டநாயகன் பும்ரா:
அதனால் 20 ஓவரில் அந்த அணி முடிந்தளவுக்கு போராடியும் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்தார். அதன் காரணமாக மாஸ் கம்பேக் கொடுத்து வரலாற்றின் சிறப்பான வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்த நம்பிக்கை நாயகன் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்போட்டியில் குறைந்த ரன்கள் அடித்த போதும் சிறப்பாக பந்து வீசுவதற்கான உத்வேகத்தை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்து வழங்கியதாக பும்ரா தெரிவித்துள்ளார். அதனால் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வுடன் பந்து வீசி வெற்றி கண்டதாக தெரிவிக்கும் அவர் தனது திட்டத்தை பற்றி கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“இது நல்ல உணர்வை கொடுக்கிறது. நாங்கள் கொஞ்சம் கீழே இருந்தது போன்ற உணர்வை எதிர்கொண்டோம். சூரியன் வெளியே வந்ததும் பிட்ச் கொஞ்சம் நன்றாக மாறியது. அதைப் பயன்படுத்தி நாங்கள் கட்டுக் கோப்புடன் நன்றாக பந்து வீசினோம். குறிப்பாக சீம் பகுதியை முடிந்தளவுக்கு தரையில் படும் வகையில் வீச முயற்சித்தேன். முடிந்தளவுக்கு திட்டத்தை செயல்படுத்துவதில் தெளிவாக இருக்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: வெறும் 6 ரன்ஸ்.. மிரட்டிய பும்ரா.. பரம எதிரியிடம் அடங்க மறுத்த இந்தியா மாஸ் கம்பேக்.. 2 வரலாற்று சாதனை வெற்றி

“அது நன்றாக வந்ததற்காக மகிழ்ச்சி. நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை போன்ற உணர்வை பெற்றோம். எங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்காக மகிழ்ச்சி. அது தான் எங்களுக்கு களத்தில் எனர்ஜியை கொடுத்தது. தற்போது நாங்கள் கவனமாக இருக்கிறோம். கடந்த 2 போட்டிகளிலும் நன்றாக விளையாடினோம். இதே செயல்பாடுகளைப் பின்பற்றி நன்றாக விளையாட முயற்சிப்போம்” என்று கூறினார்.

Advertisement