சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறிய இந்திய நட்சத்திர வீரர் – கடைசி டெஸ்டில் விளையாடமாட்டாராம்

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் சென்னையில் நடைபெற்ற நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன. இதனால் மூன்றாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் காணப்பட்டது. இருப்பினும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

cup

அதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பான இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது. அதனை தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் ( 4 ஆம் ) நான்காம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது நான்காவது போட்டியில் இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்றும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் பிசிசிஐ அறிவித்துள்ளது பதிவில் : சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தான் விளையாட முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அதனால் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Bumrah

அதனால் அவர் வேண்டுகோளுக்கிணங்க கடைசியில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடமாட்டார் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக முக்கியமான இந்த நான்காவது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என்பது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது