- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்களே குடுத்தாலும் எனக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வேணாம்.. நிராகரித்த பும்ரா.. காரணம் என்ன? – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது பல்வேறு இடையூறுகளுக்கு இடையே சிக்கி இருக்கும் வேளையில் இம்மாத இறுதிக்குள் இந்த தொடரானது முடிவடையும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப் பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

டெஸ்ட் கேப்டன் பதவியை நிராகரித்த ஜஸ்ப்ரீத் பும்ரா :

இந்த தொடருக்கான இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் வீரர்கள் அறிவிப்புக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் தற்போது பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா தான் ரோகித் சர்மாவிற்கு அடுத்து கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற பேச்சுக்களும் ஒருபுறம் இருந்து வருகிறது.

ஆனால் தற்போதைக்கு தான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விரும்பவில்லை என்றும் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் பும்ரா நிராகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி பார்க்கையில் :

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது காயம் காரணமாக அந்த தொடரின் கடைசி போட்டியில் இருந்து வெளியேறிய பும்ரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தான் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஐ.பி.எல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்ட அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் துவக்க வீரருக்கான இடம் தமிழ்நாட்டு வீரருக்கு தானாம் – விவரம் இதோ

இதன் காரணமாக தனது காயம் மற்றும் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தான் ஒரு முழுநேர வேகப்பந்து வீச்சாளராக விளையாடவே விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தானாக கேப்டன் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க பும்ரா தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -