ரபாடாவை முந்தி மீண்டும் மகுடம் சூடிய பும்ரா.. 22 வயதிலேயே உச்சம் தொட்ட ஜெய்ஸ்வால்.. கோலி முன்னேற்றம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுக போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தல்:

அந்த வகையில் வெற்றியில் முக்கிய பங்காற்றியதால் 2 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ள அவர் உலகின் நம்பர் 2வது டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் உச்சத்தையும் 22 வயதிலேயே தொட்டுள்ளார். அதே போட்டியில் சதமடித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் அவர் 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் போட்டியில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் தொடர்ந்து 6வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக நீடிக்கிறார். டாப் 10 பவுலர்களுக்கான பட்டியலில் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பும்ரா நம்பர் ஒன்:

அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவை (872) முந்திய அவர் 883 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரிலேயே முதலிடத்தை முதல் முறையாக பிடித்த அவர் தற்போது மீண்டும் அந்த மணிமகுடத்தை தனதாக்கியுள்ளார். அதே பட்டியலில் அஸ்வின் 4, ஜடேஜா 7வது இடத்தில் நீடிக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஈகோ காரணமா.. ரிஷப் பண்ட் 27 கோடிக்கு வாங்கியது ஏன்? அடுத்த கேப்டனா? லக்னோ உரிமையாளர் பேட்டி

டாப் 10 டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். அஸ்வின் 2, அக்சர் படேல் 7வது இடத்தில் நீடிக்கிறார்கள். அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Advertisement