ஏமாந்த பும்ரா..! கோலியை கட்டுப்படுத்திய பாண்டியா…கடைசியில் உண்மை சொன்ன பும்ரா !

virat1
- Advertisement -

நேற்று பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடந்த பெங்களூர் மற்றும் மும்மை அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அவுட் என்றும் தெரியாமல் அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுள்ளது மும்பை அணி.
viratout

நேற்று நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 167 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 26 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால இந்த போட்டியின் போது பும்ரா வீசிய 17 வது ஒவேரில் கோலி ஆட்டமிழந்து வெளியேறி இருக்க வேண்டியது ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை.

- Advertisement -

பும்ரா வீசிய 17 ஒவேரில் அவரது பந்தை கோலி எதிர்கொண்ட போது அதில் சிறிது எட்ஜ் ஆகி கீப்பரின் கைக்கு சென்றது. ஆனால் அதனை கவனிக்கவில்லை, கீப்பரும் கவனிக்கவில்லை. இதனால் எதிரணி எந்த அப்பீலும் செய்யாததால் நடுவரும் இதனை கண்டுக்குள்ள வில்லை. ஆனால் அந்த பந்தின் ரீபிலேவின் போது பந்து கோலியின் பேட்டில் பட்டத்திற்கான சத்தம் மிகவும் துல்லியமாக கேட்டது. மேலும் பந்து பேட்டை உரசியதை காமிக்கும் சனிக்கோ மீட்டரும் சற்று அசைவை காண்பித்தது.

இதுகுறித்து போட்டி முடிந்ததும் பேசிய பும்ரா “அந்த பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டதா இல்லையா என்று எனக்கும் தெரியவில்லை கீப்பருக்கும் தெரியவில்லை அதனால் நாங்கள் நடுவரிடம் அப்பீல் செய்யாமால் இருந்துவிட்டோம். இருப்பினும் பரவாயில்லை விராட் கோலி அதிகப்படியான ரன்களை குவிப்பதற்குள் அவரின் விக்கெட்டை பாண்டியா எடுத்துவிட்டார் “என்று தெரிவித்திருந்தார்.

Advertisement