
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் தோற்றது. அந்த வகையில் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்த பும்ராவே கேப்டனாக தொடரலாம் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அந்தளவுக்கு அசத்தும் பும்ரா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் பவுலராக ஜொலித்து வருகிறார்.
முன்னதாக வாசிம் அக்ரமுக்கு பின் ஆஸ்திரேலியர்கள் பார்த்து பயப்படும் ஒரே பவுலராக பும்ரா திகழ்வதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி சமீபத்தில் பாராட்டினார். அந்தளவுக்கு வித்தியாசமான ஆக்சனை பயன்படுத்தி தனித்துவமாக பந்து வீசும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். அதனால் அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக ஸ்மித், ஹெட் போன்ற எதிரணி வீரர்களே பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் 16 – 17 வயதில் கிரிக்கெட்டை விளையாட துவங்கிய போது தம்முடைய வித்தியாசமான ஆக்சன் காரணமாக இந்தப் பையன் 6 – 7 மாதத்துக்கு மேல் விளையாட முடியாமல் ஓடி விடுவான் என்று பலரும் சொன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். மேலும் வித்தியாசமாக பவுலிங் செய்வதால் தமக்கு யாரும் அதிகமாக கோச்சிங் கொடுக்கவில்லை என்றும் பும்ரா தெரிவித்துள்ளார்.
அதையும் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது பற்றி ஃபாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பலரும் என்னை நம்பினார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்த பவுலிங் ஆக்சன் காரணமாக நான் நீண்ட காலம் விளையாட மாட்டேன் என்று பலரும் நினைத்தார்கள். 6 – 7 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் அவர்கள் சொன்னார்கள்”
“அதனால் பலரும் என்னுடைய பந்து வீச்சில் வேலை செய்யவில்லை அல்லது உள்ளீடுகள் கொடுக்கவில்லை. அது எனக்கு சாதகமாக அமைந்தது என்று நினைக்கிறேன். ஏனெனில் அதன் காரணமாக என்னை நானே நம்பி எனக்குத் தேவையான தீர்வுகளை சொந்த வழியில் கண்டறிய வேண்டிய நிலை எனக்கு உருவானது. அந்த வகையில் யாரும் என்னை மாற்றவும் விரும்பவில்லை”
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் இந்தியாவை ஜெயிக்க வெச்சுருக்க முடியும்.. ஆனா செய்ய மாட்டாரு.. நிஜமான கவாஸ்கர் கணிப்பு
“அதே சமயம் யாரும் எனக்கு எக்ஸ்ட்ரா தீர்வுகளும் கொடுக்கவில்லை. அது எனக்கு உதவி செய்தது. 6 – 7க்கு பதிலாக என்னுடைய கேரியரை தாமதமாக 16 – 17 வயதில் தான் துவங்கினேன். எனக்கு சாதாரண பயிற்சியும் கிடைக்கவில்லை. எனவே நான் தொலைக்காட்சிகளை பார்த்து என்னுடைய சொந்த வழியில் தீர்வுகளை கண்டறிந்தேன். இன்று வரை அது எனக்கு வேலை செய்கிறது. எப்போதும் நான் என்னுடைய சொந்த உள்ளுணர்வுகள் மற்றும் தைரியத்தை நம்பியிருக்கிறேன்” என்று கூறினார்.