இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த கையோடு அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தற்போது கவுகாத்தி நகரில் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு :
இவ்வேளையில் இந்த போட்டியின் இரண்டாம் நாளான நாளை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் வெளியான உள்ள அறிவிப்பில் பல்வேறு சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் போட்டியில் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது நாளை தான் தெரியவரும். அதேபோன்று துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரும் மீண்டும் இடம் பிடிப்பாரா? மாட்டாரா? என்பது நாளைக்கு தெரியவரும்.
இந்நிலையில் நாளை வெளியாக இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு ஆட்டத்திலும் அடுத்தடுத்து பங்கேற்று விளையாடியுள்ளார்.
எனவே அவரது பணிச்சுமை காரணமாக ஒருநாள் போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் இடம் பிடித்து விளையாடுவார் என்பதனால் அதற்கு முன்னதாக போதிய ஓய்வு தேவை என்பதற்காகவும் அவர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வேறு எந்த வீரரும் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
அப்படி அவர் ஒருநாள் தொடரில் இடம் பெறாத வேளையில் அர்ஷ்தீப் சிங் ஹர்ஷித் ராணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெறுவார்கள் என்றும் தெரிகிறது.



