ஒரு வழியாக இந்தியாவுக்கு முழு கம்பேக் கொடுக்கும் பும்ரா, எந்த தொடரில் தெரியுமா? விவரம் இதோ

Bumrah
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

முன்னதாக விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா சாதாரண இருதரப்பு தொடர்களில் வெற்றிகளை கண்டாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை பதிவு செய்தார். அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை பதிவு செய்த அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று என்ன பயன் இந்தியாவுக்கு ஒரு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லையே என்ற விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

- Advertisement -

கம்பேக் கொடுக்கும் பும்ரா:
அப்படி அவர் அந்த 3 தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து தலை குனிவதற்கு பல அம்சங்கள் காரணமாக இருந்தாலும் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விளையாடாததே முதன்மை காரணமாக அமைந்தது எனலாம். ஏனெனில் இதே ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் கடந்த 2016 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முதன்மை பவுலராக உருவெடுத்தார்.

குறிப்பாக 2018 முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து 2 முறை குணமடைந்து மீண்டும் வெளியேறியுள்ளார். சொல்லப்போனால் இந்தியாவுக்காக காயமடைந்து வெளியேறுவார் பணத்துக்காக மும்பை அணிக்கு விளையாடுவார் என்று ரசிகர்கள் மனசாட்சியின்றி விமர்சித்த நிலையில் ஐபிஎல் 2023 தொடரிலும் முழுமையாக விலகிய பும்ரா தற்போது அதிலிருந்து குணமடைந்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் பந்து வீச துவங்கியுள்ளார்.

- Advertisement -

ஆரம்பத்தில் 6 – 8 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானதால் அவர் உலகக் கோப்பையில் நேரடியாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது விரைவாக குணமடைந்து வருவதால் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவரை விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல் என்சிஏவில் இயக்குனராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் முன்னிலையில் தினந்தோறும் அவர் 8 – 10 ஓவர்கள் வரை தொடர்ந்து பந்து வீசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் இந்த செய்தி விரைவில் உண்மையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “காயங்கள் என்பது இயற்கையானது. அதை நாம் உன்னிப்பாக கவனித்து எப்போது வர வேண்டும் என்று அட்டவணை போட முடியாது. இருப்பினும் தற்போது குணமடைந்து வரும் பும்ரா எம்ன்சிஏவில் 7 ஓவர்கள் வரை வலைப்பயிற்சியில் பந்து வீச துவங்கியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது அதிகமாக பயிற்சிகள் செய்து வருகிறார்”

இதையும் படிங்க:ஒரு வழியாக இந்தியாவுக்கு முழு கம்பேக் கொடுக்கும் பும்ரா, எந்த தொடரில் தெரியுமா? விவரம் இதோ

“அதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் எம்சிஏவில் நடைபெறும் 2 பயிற்சி போட்டிகளில் அவர் விளையாட உள்ளார். அங்கே அவருடைய ஃபிட்னஸ் பற்றி நாங்கள் கணக்கெடுக்க உள்ளோம்” என்று கூறினார். மொத்தத்தில் காயத்திலிருந்து குணமடைந்து நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்கு பதிலாக அயர்லாந்து போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக விளையாடி பயிற்சிகளை எடுத்து முழுமையாக தயாராகி உலகக்கோப்பையில் விளையாட பும்ரா திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement