- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெ.இ அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் – காரணம் என்ன?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுதினம் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது டெல்லி சென்றடைந்து அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் :

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே சாய் சுதர்சன் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் இடம் பெறலாம் என்று பேசப்பட்ட வேளையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே காயம் காரணமாக அதிகளவில் போட்டிகளில் விளையாடாத பும்ரா தேவையான போது பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். அந்த வகையில் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா தொடர் இருப்பதினால் அதனை கருத்தில் கொண்டு இரண்டாவது போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஏனெனில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒருநாள் அணிக்கான இந்திய அணியில் இடம்பெறாத பும்ரா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அந்த டி20 தொடரில் முழுவதுமாக பங்கேற்க வேண்டி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே பும்ராவின் பணிச்சுமை குறித்தும், காயம் குறித்தும் சிராஜ் பேசியிருந்த போதும் பும்ராவிற்கு சரியான நேரத்தில் ஓய்வு தேவை என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இந்த இரண்டாவது போட்டியில் பும்ரா ஓய்வெடுத்துக் கொள்வார் என்று உறுதியாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள சாய் சுதர்சன் – அவருக்கு பதிலாக இடம்பெறப்போவது யார்?

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பின்னர் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். இந்திய அணியின் நிர்வாகமும் தேவையான போது அவருக்கு ஓய்வினை வழங்கி வருகிறது.

- Advertisement -