சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு பின்னர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த கையோடு புதிய டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
10 இடங்கள் முன்னேற்றம் கண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா :
அந்த வகையில் வெளியான இந்த டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் நிறைந்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரின் கடைசி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வருமா 42 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அதோடு இந்த தொடர் முழுவதும் 187 ரன்களை விளாசிய அவர் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பதும் நிசாங்காவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சு துறையை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் கடைசி போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேளையில் அவரும் டி20 போட்டிகளுக்கான பவுலர்களின் தரவரிசை பட்டியலில் நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
இதையும் படிங்க : மட்டமான தரம்.. பணக்கார வாரியம்ன்னு வெளியே சொல்லாதீங்க.. பிசிசிஐயை விளாசும் ரோஹித், கோலி ரசிகர்கள்
அந்த வகையில் தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த கையோடு 10 இடங்கள் முன்னேறியுள்ள அவர் தற்போது பந்துவீச்சாளரின் தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவுடன் 18-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் மகேஷ் தீக்ஷனா என இருவருமே 622 புள்ளிகள் எடுத்து இந்த பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



