முழுசா சொல்ல முடியாது.. ஆனா இதுல வாசிம் அக்ரமை விட ஜீனியஸ் பும்ரா கிரேட் பவுலர்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா இல்லையென்றால் இந்த உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்காது என்று பலரும் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.

ஏனெனில் வித்தியாசமான ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்தி இந்தியா மறக்க முடியாத வெற்றி பெற்றது. அத்துடன் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றி கைநழுவி சென்ற போது 16, 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் சரித்திர வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ஜீனியஸ் பும்ரா:
அந்த வகையில் தேவைப்படும் போதெல்லாம் விக்கெட்டை எடுத்த அவர் இந்தியாவுக்கு கோப்பையை பரிசளித்து தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான ஃபார்மட்டில் இல்லையென்றாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வாசிம் அக்ரமை விட ஜஸ்ப்ரித் பும்ரா மகத்தான பவுலர் என்று மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“கண்டிப்பாக மகத்தான பவுலரான அவர் அனைத்து விதமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் திட்டமிடுகிறார். ஆனால் அதற்கும் நீங்கள் எந்த பந்தை எப்போது வீச வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஃபைனலில் முதல் ஓவரிலேயே ஹென்றிக்ஸை அவர் அற்புதமான பந்தில் அவுட்டாக்கினார். ஆரம்பத்தில் அந்த பந்து லெக் ஸ்டம்ப்பில் அடிப்பது போல் கோணலாக சென்றது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது ஆஃப் ஸ்டம்ப்பை தாக்கியது”

- Advertisement -

“அதை விட மார்க்கோ யான்சனின் கதவுகளை உடைத்து பந்து இன்னும் அதிகமாக திரும்பி சென்று அடித்தது. மற்ற பந்துகளிலும் பேட்ஸ்மேன்கள் அவரை அடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றும் பும்ரா அடிப்பதற்கு தேவையான அகலத்தை கொடுப்பதில்லை. அப்போது பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பவர் கொடுத்து அடிக்க நினைக்கின்றனர். அதைப் பார்க்கும் பும்ரா இன்னும் கொஞ்சம் அகலமாக புத்திசாலித்தனமான ஸ்லோயர் பந்தை வீசுகிறார்

“உண்மையில் அவர்,தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான வேகப்பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். வாசிம் அக்ரம் மிகவும் ஸ்பெஷலானவர் என்பதை நான் அறிவேன். இன்னும் சொல்வதற்கு இங்கே சில பெயர்கள் இருக்கிறது. ஆனால் அற்புதமான ஆக்சன், திறனுடன் வேகத்தைக் கொண்டுள்ள பும்ரா வித்தியாசமான நுணுக்கங்களுடன் அழுத்தமான சூழ்நிலைகளில் அசத்துகிறார். ஓரிரு முறை மட்டுமல்லாமல் அவர் இந்த மொத்த உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் அசத்தினார்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக சந்தோசப்படுறேன்.. அவர் தான் வெற்றிக்கு காரணம்.. ஆஸ்திரேலியாவிலிருந்து வாழ்த்திய கிரேக் சேப்பல்

“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் அவரை டிராவிஸ் ஹெட் அடித்தார். ஆனால் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் ஹெட்டை லோயர் பந்தால் அவுட்டாக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். எனவே ஒரு ஓவரில் அடித்தாலும் மற்ற 3 ஓவரில் அவர் உங்களை விடமாட்டார். அவரை எப்படி எதிர்கொள்வது என்ற ஐடியா எனக்கு இல்லை. ஏனெனில் அவர் எதிர்கொண்ட பலர் இங்கே வெற்றிகரமாக செயல்படவில்லை. அவர் ஜீனியஸ்” என்று கூறினார்.

Advertisement