7 முறை 5 விக்கெட்ஸ்.. கபில் தேவ் வாழ்நாள் சாதனையை சமன் செய்த சேனா நாயகன் பும்ரா.. வெளிநாட்டில் அபாரம்

- Advertisement -

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி சுமாராகவே விளையாடி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணிக்கு விராட் கோலி, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதிகபட்சமாக அறிமுக வீரர் நிதிஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியை அபாரமாக பந்து வீசிய இந்தியா வெறும் 104 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது.

- Advertisement -

பும்ரா அபாரம்:

உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 21, மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 5, சிராஜ் 2, ஹர்ஷித் ரனா 3 விக்கெட்டுகளை விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத்தொடர்ந்து இந்த போட்டியில் 46 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட சேனா நாடுகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 7 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் வாழ்நாள் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

கபில் தேவ் சாதனை சமன்:

இதற்கு முன் கபில் தேவும் சேனா நாடுகளில் 7 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜாகீர் கான் மற்றும் பிஎஸ் சந்திரசேகர் (தலா 6) உள்ளார்கள். அந்த வகையில் ஜஸ்ப்ரித் பும்ரா சவாலான வெளிநாட்டு மண்ணில் கபில் தேவ் போல இந்திய அணியின் நாயகனாக செயல்பட்டு வருவதை இந்த சாதனை காட்டுகிறது.

இதையும் படிங்க: 104க்கு ஆஸியை சுருட்டி வீசிய இந்தியா.. 1947 சாதனையை உடைத்து புதிய சாதனை.. 46 ரன்ஸ் முன்னிலை

இது போக இந்திய மண்ணில் அவர் வெறும் 2 முறை மட்டுமே 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த வெளிநாட்டு மண்ணில் அவர் 11 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அது சொந்த ஊரை விட வெளிநாட்டு மண்ணில் ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமாக செயல்படும் தரமான வீரர் என்பதை காட்டுகிறது.

Advertisement