டி20 போட்டிகளில் மோசமான சாதனையை கடந்த போட்டியில் நிகழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ

Jasprit Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டக்ளை இழந்து 213 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 90 ரன்களையும், டோனவன் பெரேரா 30 ரன்களையும் குவித்து அசத்தினர்.

ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய மோசமான சாதனை :

பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 51 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

அதோடு முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது மட்டுமின்றி இந்த தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 45 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு மோசமான சாதனையை தனது கரியரில் முதல் முறையாக நிகழ்த்தி இருந்தார்.

அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இதுவரை டி20 போட்டிகளை பொருத்தவரை மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசி வரும் அவருக்கு எதிராக சிக்ஸர்களை அடிப்பது பேட்மன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் முள்ளான்பூர் நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியின் போது நான்கு ஓவர்களை வீசிய அவர் 11.20 என்ற சராசரியுடன் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதுமட்டும் இன்றி இந்த போட்டியில் அவரது பந்துவீச்சுக்கு எதிராக நான்கு சிக்ஸர்கள் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்டன.

இதையும் படிங்க : முதல் போட்டியில் கலக்கிய ஹார்டிக் பாண்டியா இரண்டாவது போட்டியில் தடுமாற என்ன காரணம்? – இர்பான் பதான்

இப்படி ஒரு சர்வதேச டி20 போட்டியில் பும்ரா நான்கு சிக்ஸர்களை விட்டுக் கொடுப்பது இதுவே முதல்முறை. இந்த போட்டியின் முதல் இரண்டு ஓவர்களை அவர் சிறப்பாக வீசியிருந்தாலும் கடைசி இரண்டு ஓவர்களை தென்னாப்பிரிக்க அணி வெலுத்து வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement