- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரு ஓவர்ல யார் அதிக ரன் அடிச்சான்னு போய் தேடிப்பாருங்க.. ஆஸி செய்தியாளருக்கு பும்ரா மாஸ் பதிலடி

காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் முடிவில் 51-4 என இந்தியா திணறி வருகிறது. 1 – 1* (5) என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கும் நிலையில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் குவித்தார்கள்.

இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார். பின்னர் விளையாடும் இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, சுப்மன் கில் 1, கோலி 3, ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 394 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியாவுக்கு களத்தில் ராகுல் 33*, கேப்டன் ரோஹித் 0* ரன்களுடன் உள்ளார்கள்கள்.

- Advertisement -

கூகுள் பண்ணுங்க:

அந்த வகையில் இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாற்றமாக விளையாடுகிறார்கள். அதனால் மழை மட்டுமே இந்தியாவை இப்போட்டியில் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அந்த சூழ்நிலையில் காபா மைதானத்தில் பேட்டிங் செய்வது பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று ஜஸ்ப்ரித் பும்ராவிடம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர்கள் கேட்டனர்.

பவுலரான உங்களிடம் இதைக் கேட்பது சரியில்லை என்றாலும் உங்களது கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பும்ரா ஜாலியாக கொடுத்த மாஸ் பதில் பின்வருமாறு. “இது சுவாரசியமான கேள்வி. ஆனால் நீங்கள் என்னுடைய பேட்டிங் திறமையை பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் யார் அதிக ரன்கள் குவித்துள்ளார் என்பதை நீங்கள் கூகுளில் தேடிப் பாருங்கள்”

- Advertisement -

பும்ராவின் பதிலடி:

“நகைச்சுவை வேறு பகுதி. அது வேறொரு கதை” என்று கூறினார். அதாவது 2023ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் மீண்டும் விளையாடியது. அந்தப் போட்டியில் ஜாம்பவானாக கருதப்படும் ஸ்டுவர்ட் ப்ராடுக்கு எதிராக இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட பும்ரா ஒரே ஓவரில் 35 ரன்கள் தெறிக்க விட்டார்.

இதையும் படிங்க: ஒரே ஓவர்ல 25 ரன்ஸ் அடிக்க போறீங்களா? பாக்கெட்ல வெச்சா என்ன? கில், ஜெய்ஸ்வாலை சாடிய கவாஸ்கர்

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்தார். அப்படியிருந்தும் என்னுடைய பேட்டிங் திறமையை சந்தேகப்படுகிறீர்களே? என்ற வகையில் ஆஸ்திரேலிய செய்தியாளர்களுக்கு அவர் ஜாலியாக பதிலடி கொடுத்தார். இதை அடுத்து காபாவில் கடைசி 2 நாட்களிலும் மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -