- Advertisement -
உலக கிரிக்கெட்

ENG vs WI : துவக்க வீரரான ஜேசன் ராய். நேற்றைய போட்டியில் இறங்கவேயில்லை – காரணம் இதுதான்

உலக கோப்பை தொடரின் 19வது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பூரான் 63 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து சார்பாக ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி 9 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதன் பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூட் ஆட்டமிழக்காமல் 100 ரன்களை அடித்தார் அதுமட்டுமின்றி பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரூட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்றைய போட்டியில் ஜேசன் ராய் போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே காயம் அடைந்து வெளியேறினார். பிறகு மீண்டும் ஆட்டம் முடியும் வரை அவர் பீல்டிங் செய்ய வரவே இல்லை. இதனால் அவருக்கு ஐசிசியின் விதிப்படி ஒரு ஆட்டக்காரர் போட்டியின் துவக்கத்தில் காயமடைந்து வெளியேறினால் அவர் அடுத்ததாக பேட்டிங் செய்ய வரும் பொழுது 7 விக்கெட்டுகள் விழுந்த பின்னரே களமிறங்க வேண்டும்.

அதன் காரணமாக நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்க இருந்த ராய் இறங்காமலேயே அவருக்கு பதிலாக ரூட் துவக்க வீரராக களமிறங்கினார். இருப்பினும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

- Advertisement -
Published by