மதிக்காமல் சுற்றிய வெளிநாட்டு வீரர், தடை விதித்து அபராதம் போட்ட கிரிக்கெட் வாரியம் – ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை

Roy
- Advertisement -

இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் கடந்த சில வருடங்களாக அந்த அணியின் முக்கியமான வீரராக விளையாடி வருகிறார். ஓப்பனிங்கில் களமிறங்கி எதிரணி பந்து வீச்சாளர்களை பந்தாடும் அவர் அதிரடியாக ரன்களை குவித்து தனது அணிக்கு வெற்றிகளை தேடித் தந்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் விரைவில் நடைபெற இருக்கும் 2022 தொடரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஆனால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அவர் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக திடீரென அறிவித்தார்.

Roy

- Advertisement -

மதிக்காமல் சுற்றிய ஜேசன் ராய்:
அது மட்டுமல்லாமல் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றது தம்மை மனதளவில் பாதித்ததாக தெரிவித்த அவர் தற்காலிகமாக இங்கிலாந்து உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைப் போன்ற ஒரு முக்கியமான அதிரடி வீரர் திடீரென இப்படி விலகியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது.

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் தற்காலிகமாக ஓய்வு எடுப்பதற்கு முடிவு எடுக்கும் பட்சத்தில் முதலில் அதை சம்மந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்துடன் முதலில் கலந்து ஆலோசித்து அவர்களின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை அணுகாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதை அறிவித்ததாக தெரிகிறது.

Jason Roy

தடை மற்றும் அபராதம்:
ஆனால் அவரின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் முடிவு என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை மதிக்காமல் அதன் விதிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கருதியது. இதனால் கடுப்பான அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஜேசன் ராய்க்கு 2,500 பௌண்ட்ஸ் அபராதம் மற்றும் 2 போட்டிகளுக்கு விளையாட அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைக்கப்பட்டதன் பேரில் எடுத்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டது பின்வருமாறு. “இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய உத்தரவை மீறி கிரிக்கெட் நலன்களுக்கு பாதகமாக அல்லது கிரிக்கெட் விளையாட்டுக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும், அவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டை ஜேசன் ராய் ஒப்புக் கொண்டுள்ளார். இதை அடுத்து விதிமுறை 3.3 எண்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனை குறைப்பு:
கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜேசன் ராய் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாரபட்சமின்றி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை பார்த்து பல ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக அபராதமும் தண்டனையும் பெற்றுள்ளதால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் அவரால் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் படி ஓய்வில் இருக்கும் அவர் இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாட எப்போது திரும்புகிறாரோ அப்போது 2 போட்டிகள் விளையாட முடியாது. இருப்பினும் இதற்கு முன் அவர் நாட்டுக்காக ஆற்றிய பங்கை கருத்தில் கொண்டு அடுத்த 12 மாதங்களில் அவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த 2 போட்டிகளுக்கான தடை விலக்கிக் கொள்ளப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இதேபோல் அதை மீண்டும் அவரின் நடவடிக்கை மோசமாக இருந்தால் 2 போட்டிகள் தடை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

jason

கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜேசன் ராய் விளையாடி இருந்தார். இதுவரை டெஸ்ட் உட்பட இங்கிலாந்துக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள அவர் இனி எப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என்ற செய்தி தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அதற்குள் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 2,500 பவுண்ட்ஸ்களை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

Advertisement