மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அதிரடி வீரர் ஆடுவது சந்தேகம்..! இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா..?

jason

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 17 ) நடைபெற இருக்கிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் ஆடுவது சந்தேகம் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
jason
இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சுதாரித்து ஆடிய இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி பழி தீர்த்து கொண்டது.

இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் ஜேசன் ராய்க்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் விளையாடிய ராய் 42 பந்திகளில் 40 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் ஜேசன் ராய்க்கு காயம் இன்னும் குணமடையாததால் இன்று நடக்கவிருக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கபடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
eng
ஏற்கனவே இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டிருந்தார். அதே போல டேவிட் மாலன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 போட்டியில் விளையாடுவதற்கு சென்றுவிட்டதால் , அவருக்கு பதில் ஜேம்ஸ் வின்ஸ் இணைந்திருப்பது சாதகமான கூடுதலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் பேஸ் மார்க் வூட்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.