இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தோற்றது. அது போக 2014க்குப்பின் கடந்த 10 வருடங்களாக இந்தியாவுக்கு எதிராக ஒரு முறை கூட ஆஸ்திரேலியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லவில்லை.
எனவே இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. அத்துடன் 3 – 1 (5) என்ற கணக்கில் இம்முறை இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தெரிவித்தார். அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் இப்போதே கணிப்புகளை வெளியிட்டு இந்தியாவுக்கு எதிராக மனதளவில் போட்டியை துவங்கியுள்ளனர்.
இந்த டைம் மிஸ்ஸாகாது:
அந்த வரிசையில் இணைந்துள்ள ஜேசன் கில்லஸ்ப்பி இம்முறை இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெல்லும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக பட் கமின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நேதன் லயன் போன்ற தங்களுடைய நாட்டின் உச்சகட்ட தரத்தையும் அனுபவத்தையும் கொண்ட பவுலர்கள் இம்முறை விளையாடுவதாக கில்லஸ்ப்பி கூறியுள்ளார். அதனால் கடந்த 2 தொடர்களைப் போல இம்முறை இந்தியா வெல்ல முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கில்லஸ்ப்பி பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய அணிக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். இம்முறை அவர்கள் அதை செய்வார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவர்கள் நம் நாட்டில் உள்ள சிறந்த பவுலர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடைய சாதனைகள் பேசும்”
ஆஸ்திரேலியா வெல்லும்:
“குறிப்பாக தற்போது நேதன் லயன் இருப்பதால் களத்தில் அசத்துவதற்கு தேவைப்படும் சாத்தியமான பவுலிங் அட்டாக்கை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. மறுபுறம் நீண்ட காலமாக நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வரும் இந்திய அணி சூடாக உள்ளனர். சமீபத்தில் அவர்கள் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளனர்”
இதையும் படிங்க: முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா – என்ன தெரியுமா?
“இருப்பினும் இம்முறை இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். டேவிட் வார்னர் போன்ற வீரர்களை மாற்றுவது மிகவும் கடினம். அதற்காக ஸ்டீவ் ஸ்மித் மேலே விளையாடும் ஐடியா சரியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் மீண்டும் மிடில் ஆடையில் 4வது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



