இந்திய அணியின் அசுரத்தனமான பலமே இவங்கதான். வேற லெவல்ல வளந்து நிக்குறாங்க – கில்லெஸ்பி புகழாரம்

Gillespie
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நான்கு டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டது. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்னி ஒலிம்பிக் பார்க் என்னும் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

INDvsAUS

- Advertisement -

இங்கு அனைத்து வீரர்களும் தனித்தனியே 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள். 14 நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் இல்லாத வீரர்கள் அனைவரும் சிட்னி நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின்னர் பயிற்சிப் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட போகின்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் . குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோரை தனித்தனியே புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…
இந்திய பேட்ஸ்மேன்களை வேகப்பந்து வீச்சை வைத்து தாக்குவதற்கு அனைத்து அணிகளும் தயாராகிக் கொண்டிருக்கும்.

IND-bowlers

ஆனால் தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முன்பிருந்ததை விட முன்னேறி விட்டனர். மிகச் சிறப்பாக இருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த பந்துவீச்சாளர்களை நான் குறை சொல்லவில்லை
ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் தனித்தனியாக தனிச் சிறப்பாக பந்து வீசுகிறார்.

முகமது சமி மிகச்சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் புவனேஸ்வர் குமார் மற்றும் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் வந்து சேர்ந்துவிட்டனர் என்று தெரிவித்திருக்கிறார் ஜேசன் கில்லஸ்பி.

Advertisement