மீண்டும் களம்புகுந்த பிராங்க் ஸ்டார். போட்டி பாதியில் நிறுத்தம் – இன்றைய போட்டியில் ஏற்பட்ட பரபரப்பு

Jarvo-2
Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் ஒரு மைதானத்தில் நேற்று செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆனது 191 ரன்களை குவிக்க அடுத்ததாக தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

jarvo 1

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகையில் அந்நாட்டு ரசிகர் ஜார்வோ இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவை தள்ளிவிட்டு பந்துவீச முயற்சி செய்தார். இதனால் அவரை உடனடியாக மைதான காவலர்கள் பிடித்து வெளியேற்றினார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி போட்டியும் சிறிது நேரம் தடைபட்டது. இந்த செயலை செய்த ரசிகர் ஜார்வோ வேறுயாருமில்லை. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த அதே ரசிகர்தான்.

jarvo

கடந்த இருமுறையும் வீரர்களை நெருங்காமல் மைதானத்திற்குள் வந்த ஜார்வோ இம்முறை மைதானத்திற்குள் வந்தது மட்டுமின்றி பேர்ஸ்டோவை தள்ளிவிட முயன்றுள்ளார். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அவர் எவ்வாறு மைதானத்திற்குள் நுழைய முடியும் ? என்று ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இருமுறை மைதானத்திற்கு உள்ளே வந்த அவரை மைதான ஊழியர்கள் வெளியேற்றி பின்னரும் மீண்டும் தற்போது கொரோனா பாதுகாப்பு வளையத்தில் விளையாடி வரும் வீரர்களிடையே வந்தது பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement