கோலி அப்படி ஏதும் என்கிட்ட கேக்கல. அதெல்லாம் வெறும் கற்பனை தான் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேமிசன்

Jamieson
- Advertisement -

நியூசிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கைல் ஜேமிசன் இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணிக்கு ஏலம் போனார். இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் அவர் ஒரு மிகச்சிறப்பான ஆல்ரவுண்டர் என்பதனால் அவர் தொடர்ந்து பெங்களூர் அணியில் நீடிக்கிறார்.

jamieson

- Advertisement -

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரின்போது வலைப்பயிற்சியில் டியூக் பந்தினை வைத்து அவரை பந்துவீச கோலி கேட்டுக்கொண்டதாக ஆஸ்திரேலிய அணியின் வீரரான கிறிஸ்டின் ஐபிஎல் தொடரின்போது தெரிவித்தார். அந்த விடயம் அப்போது இணையத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது.

தற்போது நடைபெற்று முடிந்த இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்த முக்கிய காரணமாகவும் ஜேமிசன் திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் போது 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் என இந்திய அணியை காலி செய்த ஜேமிசன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விராத் கோலியை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார்.

Jamieson

இந்நிலையில் ஐபிஎல் தொடரின்போது விராட் கோலி உங்களை டியூக் பந்தில் பந்து வீச அழைத்தாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு கோலி அளித்த பதிலாவது : ஒரு நல்ல கதைக்கு சுவாரசியத்தை சேர்க்கும் நோக்கில் அவற்றை கிறிஸ்டியன் கூறியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடரிலும் சரி, இங்கிலாந்து சுற்றுப்பயணமும் சரி எதிர்வரும் தொடர்களின் சவால்களை மட்டுமே நானும் விராத் கோலியும் பேசிக்கொண்டோம்.

Jamieson

மற்றபடி டியூக் பந்து குறித்து பேசிக் கொண்டாலும் அவர் என்னை அந்த பந்தினை கொண்டு வலைப்பயிற்சியில் பந்து வீச கூறவில்லை. மேலும் அவர் அப்படி ஒன்றும் என்னிடம் வேண்டுகோளை முன்வைக்கவில்லை இது எல்லாம் ஒரு கற்பனை கதை என்று ஜேமிசன் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement