டெஸ்ட் சாம்பியன்ஷிப் : கடைசி நாளில் பாத்ரூமில் ஒளிந்து கொண்ட நியூசி வீரர் – நடந்தது என்ன ?

Jamieson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியின் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நியூசிலாந்து வீரர்கள் தங்கள் வெற்றி குறித்த தருணங்களை தற்போது சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

nz

- Advertisement -

அந்த வகையில் கடைசி நாளின் போது வெற்றிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட வேளையில் நியூசிலாந்து வீரர் ஒருவர் பதட்டத்தை தணிக்க பாத் ரூமில் ஒளிந்து கொண்டிருந்த சம்பவம் தற்போது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் தான் இறுதி நாளின்போது பாத்ரூமில் ஒளிந்துகொண்டு பயத்திலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : நாங்கள் போட்டியின் கடைசி நாளன்று ஓய்வு அறைக்குள் அமர்ந்து டிவியில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தோம். நேரில் பார்ப்பதை விட டிவியில் சற்று தாமதம் இருந்தது. மேலும் இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு பந்திற்கும் ஆரவாரம் செய்து உற்சாகமூட்ட ஒவ்வொரு பந்திலும் விக்கெட் விழுந்து விடுமோ ? என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.
ஆனால் நல்ல வேளை அது விக்கெட் இல்லாமல் ஒரு ரன்னாகவோ அல்லது ரன் ஏதுமின்றியும் அந்த பந்து அமைந்துவிட்டது.

Jamieson

ரசிகர்களின் ஆரவாரம் காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் நான் சற்று தடுமாறினேன். அதுமட்டுமின்றி டிவியிலும் போட்டி சற்று தாமதமாக ஒளிபரப்பானதால் இன்னும் பதற்றம் அதிகரித்தது. இதனால் மேட்சை பற்றி எதுவும் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று பாத்ரூமில் போய் ஒளிந்து கொண்டு பதட்டத்தை தவிர்க்க முயன்றேன்.

taylor

இருப்பினும் எங்கள் அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் சீனியர் வீரர் ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத் தந்தனர். அதன்பிறகுதான் நான் மகிழ்ச்சி அடைந்தேன் என ஜேமிசன் கூறியுள்ளார். ஜேமிசனின் இந்த சுவாரஸ்யமான பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவரின் இந்த கருத்திற்கு தற்போது ரசிகர்களும் தங்களது கருத்தினை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement