வயசானாலும் வேகம் குறையவில்லை.! 40வயதுவரை இவர் விளையாடுவர் .! இங்கிலாந்து பயிற்சியாளர் கூறியது யாரை தெரியுமா..!

- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். தற்போது நடைபெற்று வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் கூட இவரது பந்துவீச்சு மிக சிறப்பாக அமைந்துள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இவர் மொத்தம் 9 விக்கெட்களை கைப்பற்றினர். பந்து வீச்சில் அதகளப்படுத்தி வரும் இவருடைய வயது தற்போது 36.

anderson

- Advertisement -

2003ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் இப்போதுவரை மொத்தம் 140 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் மொத்தம் 553 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் ஐசிசி தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்கள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 903 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் ஆண்டர்சன் பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது தற்போது உள்ள இங்கிலாந்து அணியின் பவுலிங் துறுப்பு சீட்டாக ஆண்டர்சன் விளங்குகிறார் என்றார்.

anderson 2

மேலும் அண்டர்சனால் 40 வயதுவரை கிரிக்கெட் விளையாட முடியும் உலகில் உள்ள பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் 30 வயதினை தாண்டும் போது அவர்களது வேகத்தினை சற்று இழப்பார்கள். அனால், ஆண்டர்சன் 36 வயதாகியும் இன்று வரை அவருடைய பந்துவீச்சில் வேகம் குறையவில்லை இதற்கு முக்கிய காரணம் அவரது உடற்தகுதி அவரது உடல் இந்த வயதிலும் அவரை வேகமாக பந்து வீச ஒத்துழைக்கிறது. இதனாலே அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்று பெய்லிஸ் புகழ்ந்துள்ளார்.

Advertisement