இந்தியாவை சாய்ப்பதற்காக இப்போதே தயாரான இங்கிலாந்து – கருப்பு குதிரையை ஒளித்து வைத்து சூப்பர் திட்டம்

Eng-1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக கடந்த வருடம் துவங்கிய அந்த தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் விராட் கோலி – ரவி சாஸ்திரி என்று இருந்த கூட்டணி மாறி இம்முறை ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் என்ற புதிய கூட்டணியின் தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது.

INDvsENG

- Advertisement -

கடைசியாக கடந்த 2007இல் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன்பின் 15 வருடங்களாக அங்கு வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவித்து வரும் இந்தியா தற்போது அவரது மேற்பார்வையில் ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே விராட் கோலி பதிவு செய்துள்ள முக்கால்வாசி வெற்றியை இந்த கடைசி போட்டியிலும் வென்று சிறப்பாக பினிஷிங் செய்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

புதிய இங்கிலாந்து:
மறுபுறம் கடந்த வருடம் இருந்த இங்கிலாந்தை விட தற்போதைய அணி வலுவான அணியாக மாறியுள்ளது. ஏனெனில் ஜோ ரூட் தலைமையில் சமீப காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து தற்போது இந்தியாவை போலவே புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியில் அதிரடியான அணியாக மாறியுள்ளது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 2 – 0* என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிப்பதே அதற்குச் சான்றாகும்.

 

- Advertisement -

anderson 1

எனவே ஜுலை 1இல் நடக்கும் கடைசி போட்டியில் வென்று இந்த தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர இங்கிலாந்து போராடும் என்பதால் இப்போட்டி நிச்சயமாக இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கப் போகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான அந்த முக்கிய போட்டிக்கு இப்போதே தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக ஜூன் 23இல் துவங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அதன் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்படவில்லை.

கருப்பு குதிரை:
பழைய சரக்கை போல 40 வயதை தொட்டுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் வயது ஆகஆக மலைபோல 650க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனைகளை படைத்து வருகிறார். அப்படிப்பட்ட அவர் இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்படக் கூடியவர். குறிப்பாக இந்தியாவின் துருப்புச் சீட்டாக கருதப்படும் விராட் கோலியை தனது ஸ்விங் பந்துகளால் பலமுறை அவுட் செய்த அவர் இங்கிலாந்தின் கருப்பு குதிரையாக வலம் வருகிறார். அதனால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் புத்துணர்ச்சியுடன் பந்து வீசும் வகையில் இந்த முடிவை இங்கிலாந்து நிர்வாகம் எடுத்துள்ளது.

- Advertisement -

Stokes

ஆனால் லேசான காயத்தால் ஜேம்ஸ் ஆண்டர்சன் அமர வைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவித்தாலும் அதை இங்கிலாந்து நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் இந்தியாவுக்கு எதிரான அந்த அணியின் இந்த திட்டம் உறுதியாகியுள்ளது. இதுபற்றி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியது பின்வருமாறு. “துரதிஷ்டவசமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் நாங்கள் எதிர்பார்த்தது போல் வரவில்லை. எனவே ஜெமி ஓவர்ட்டன் இப்போட்டியில் அறிமுகமாக உள்ளார். இது ஆண்டர்சனுக்கு துரதிஷ்டவசமானது என்றாலும் எங்களுக்கு இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் போட்டி காத்திருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவரின் நிலை பற்றி எனக்கு தெரியவில்லை. அவருக்கு கணுக்காலில் லேசான வீக்கம் மட்டுமே இருக்கிறது” என்று கூறினார்.

அதாவது நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் வலைபயிற்சியின் போது காணுகாலில் லேசான வீக்கத்தை சந்தித்ததால் அவரை மேற்கொண்டு விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய போட்டி காத்திருப்பதால் அவருக்கு பதில் இளம் வீரர் ஓவர்டன் களமிறங்குவதாக தெரிவித்துள்ளார்.

rohith 2

அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக ஆண்டர்சனை இங்கிலாந்து ஒளித்து வைப்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. எப்படி இருந்தாலும் இங்கிலாந்தை வீழ்த்துவதற்காக ஜூன் 23இல் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாட்கள் பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா ஆண்டர்சன் உட்பட அனைவரையும் சமாளிக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement