சச்சின் கடவுள் மாதிரி.. ஆனா அந்த 2 வேலையை செஞ்ச கோலியை சமாளிக்க கஷ்டபட்டேன்.. ஆண்டர்சன் வெளிப்படை

James Anderson 2
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரை முன்னிட்டு இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் தம்முடைய கேரியரில் மிகப்பெரிய சவாலைக் கொடுத்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் பற்றி பேசியுள்ளார். அதில் சச்சினை இந்திய ரசிகர்கள் கடவுள் போல் பாவித்துக் கொண்டாடியதாக அவர் பாராட்டியுள்ளார்.

அமைதி, பொறுமை போன்றவற்றைக் கொண்டிருந்த சச்சின் தமக்குப் பெரிய சவாலை கொடுக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் சாதாரண விக்கெட் விழுந்தாலே வெறித்தனமாக கொண்டாடும் விராட் கோலி ஆக்ரோசமிக்கவர் என்று ஆண்டர்சன் கூறியுள்ளார். போதாகுறைக்கு 2018, 2021 தொடர்களில் இந்தியாவை தலைமைத் தாங்கிய விராட் கோலி தமக்கு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ஆகிய 2 வகையில் சவாலைக் கொடுத்ததாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மாஸ்டர் சச்சின் – கிங் கோலி:

அந்த கடினமான சவால்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சினை விட விராட் கோலி மிகவும் வித்தியாசமான கேரக்டர். சச்சின் மிகவும் மிருதுவானவர், களத்தில் அமைதியான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்க கூடியவர். விராட் கோலி உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவர். அவர் அதை தன்னுடைய சட்டையில் அணிந்திருப்பதை உங்களால் பார்க்க முடியும்”

“அவருடைய கேப்டன்ஷிப்பில் விக்கெட் விழுந்தால் அவர் அதை கொண்டாடித் தீர்ப்பார். அதனால் முடிந்தளவுக்கு விராட் கோலி யார் என்பது பற்றி கவலைப்படாமல் சாதாரண பேட்ஸ்மேன் என்று நினைத்துக் கொண்டு அவரை எதிர்கொள்ள முயற்சித்தேன். அது மிகவும் கடினமான நேரங்கள். களத்தில் நாங்கள் நிறைய போட்டிகளைக் கொண்டிருந்தோம்”

- Advertisement -

சாவலான விராட் கோலி:

“கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலியுடன் நான் நிறைய வாய்மொழி சண்டையைக் கொண்டிருந்தேன். சச்சின் டெண்டுல்கரிடம் அதை நான் முயற்சிக்க மாட்டேன். சச்சினுக்கு எதிராக விளையாடிய போது அவர் தனது கேரியரில் வித்தியாசமான நிலையில் இருந்தார். கடவுளைப் போன்ற இருப்பைக் கொண்டிருந்த அவர் இந்தியாவில் வித்தியாசமாக நடத்தப்பட்டார். ரசிகர்கள் அவரை நடத்திய விதமும் பார்த்த விதமும் அற்புதமாக இருந்தது”

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ 2025: சொந்த மண்ணில் இந்தியா வெல்லுமா? வெளியான முழு அட்டவணை இதோ

“விராட் கோலியும் நாளடைவில் அது போன்ற நிலையை அடைந்தார். ஆனால் கேரியரின் துவக்கத்தில் அவர் அப்படி இல்லை” என்று கூறினார். முன்னதாக விராட் கோலியை 7 முறை தம்முடைய கேரியரில் அவுட் செய்த ஜேம்ஸ் ஆண்டசன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை 9 முறை எடுத்தார். அந்த 3 ஜாம்பவான்களுமே ரசிகர்களுக்கு நீங்காத நினைவுகளைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement