IND vs ENG : அவரிடம் மீண்டும் தடுமாற போறீங்க, எச்சரிக்கும் கோச் – சுமாரான ஃபார்மில் சவாலை சமாளிப்பாரா விராட் கோலி

Anderson-3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று கடந்த வருடம் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கிடப்பில் போட்டு வந்த கடைசி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா அபாரமாக செயல்பட்டு முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே பர்மிங்காமில் நடைபெறும் அத்தொடரின் கடைசி போட்டியில் வென்று 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா போராட உள்ளது.

rohith 1

- Advertisement -

ஆனால் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் திண்டாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து தற்போது பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கலம் ஆகிய புதிய கேப்டன் பயிற்சியாளர் கூட்டணியால் வலுவான அணியாக மாறியுள்ளது. மறுபுறம் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் என்று மாறியுள்ள இந்திய அணியை முதல் முறையாக ஒரு வெளிநாட்டு போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக வழி நடத்த உள்ளார். எனவே கடந்த வருடத்தை போலல்லாமல் இம்முறை இங்கிலாந்தை இப்போட்டியில் சாய்த்து விராட் கோலி பெற்றுக்கொடுத்த முக்கால்வாசி வெற்றியை வெற்றிகரமாக பினிஷிங் செய்து கோப்பையை வெல்வது ரோஹித் சர்மாவுக்கு சவாலாக இருக்கப் போகிறது.

விராட் – ஆண்டர்சன்:
அதைவிட இந்த தொடரில் விராட் கோலி சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு வழக்கம்போல எழுந்துள்ளது. ஏனெனில் 2019இல் 31 வயதிலேயே 70 சதங்களை அசால்டாக அடித்து சச்சினின் 100 சதங்கள் உலக சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதன்பின் பார்மை இழந்து கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். அதனால் 2 – 3 மாதங்கள் பிரேக் எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டதை பின்பற்றாத அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

anderson 1

ஆனால் அவருக்கு இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் எனும் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் ஜாம்பவான் சச்சினை அதிகமுறை அவுட் செய்த பவுலர் என்ற சாதனை படைத்துள்ள ஆண்டர்சன் 40 வயதை தொட்டும் ஓய்வு பெறாமல் முன்பைவிட அட்டகாசமாக பந்துவீசி 650க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து நல்ல பார்மில் உலக சாதனை படைத்து வருகிறார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பலமுறை அவுட்டாகி மொத்தமாக தடுமாறிய விராட் கோலி 2018இல் ஒருமுறைகூட அவுட்டாகாமல் தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என நிரூபித்தார்.

- Advertisement -

எச்சரிக்கும் கோச்:
ஆனால் 2019க்கு பின் படுமோசமாக தடுமாறி வரும் விராட் கோலி கடந்த 2021இல் இந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் வழக்கம் போல மீண்டும் தடுமாறி ஆண்டர்சனுக்கு எதிராக அவுட்டானார். இந்நிலையில் வயதானாலும் ஸ்டைல் மாறாமல் அற்புதமான பார்மில் இருக்கும் ஆண்டர்சனுக்கு எதிராக சுமாரன பார்மில் திண்டாடி வரும் விராட் கோலி ஜூலை 1இல் நடைபெறப்போகும் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியிலும் அவுட்டாவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அவரின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

rajkumar

எனவே அப்போட்டியில் விராட் கோலி எச்சரிக்கையுடன் விளையாடுவது அவசியம் என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் அற்புதமான போட்டியை பார்க்க காத்திருக்கிறோம். இருப்பினும் விராட் கோலியை பலமுறை அவர் செய்துள்ளது ஆண்டர்சனுக்கு மனதளவில் மிகப்பெரிய பலமாகும். ஆனால் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அவரை ஆண்டர்சன் அவுட் செய்ய முடியவில்லை. இருப்பினும் 2014இல் விராட் கோலியை மொத்தமாக அவர் தடுமாற வைத்தது அந்த இருவரிடையே ஆண்டர்சனுக்கு தான் மனதளவிலான சாதகத்தை கொடுக்கும்”

“ஸ்விங் ஆகாத இந்திய கால சூழ்நிலைகளில் விளையாடி விட்டு தாறுமாறாக ஸ்விங் ஆகும் இங்கிலாந்து சூழ்நிலைக்கு சென்று அதற்கு விரைவாக உங்களை உட்படுத்திக் கொள்ளாவிடில் நிச்சயம் தடுமாறுவீர்கள். ஆனால் விராட் கோலி போன்ற நல்ல வீரர் சவாலை ஏற்றுக்கொண்டு திடமாக உறுதியாக எதிர்கொண்டால் அவரிடம் அவுட்டாக முடியாது. மேலும் 2014 மற்றும் 2022 ஆகிய காலத்திற்கு இடையே விராட் கோலியிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2018இல் இங்கிலாந்து கால சூழ்நிலையில் ரன்கள் அடிக்க முடியுமா என்ற கேள்விக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்திருந்தார். எனவே அதை அவர் இந்த முறை தொடர வேண்டும்” என்று கூறினார்.

Anderson

இந்தியாவுக்காக குறிப்பாக விராட் கோலியை அந்த முக்கிய போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக இன்று துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement