- Advertisement -
உலக கிரிக்கெட்

எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓய்வுபெறும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 194 ஒருநாள் போட்டிகள், 19 டி20 போட்டிகள் மற்றும் 187 டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கி உள்ளார்.

தற்போது 41 வயதில் எட்டியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் எப்போது இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அடுத்த வாரம் துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுடன் உள்ள டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியுடன் அவர் இங்கிலாந்து அணியில் இருந்து விடைபெறுவார் என்று தெரிகிறது. 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் வேகப்பந்து வீச்சாளராக 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

அதுதவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராகவும் உள்ளார். இந்த பட்டியலில் முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.

இதையும் படிங்க : 2024-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் நடைபெற்ற மாபெரும் உலகசாதனை – விவரம் இதோ

இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறும் அனுபவ வீரரான இவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உரிய மரியாதையை வழங்கியுள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றதும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக அவர் இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -